HomeBlogதேர்தல் நடத்தை விதிமுறைகள்

தேர்தல் நடத்தை விதிமுறைகள்

 

Rules of Electoral Conduct

தேர்தல் நடத்தை
விதிமுறைகள்

தமிழகத்தில் 234 சட்டசபைத் தொகுதிகளுக்கும் ஒரே
கட்டமாக ஏப்ரல் 6ஆம்
தேதி வாக்குப்பதிவு நடைபெறும்
என தலைமைத் தேர்தல்
ஆணையர் சுனில் அரோரா
தெரிவித்துள்ளார்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

தமிழகம், புதுச்சேரி, கேரளத்துக்கு தேர்தல் தேதி: Click Here

நாடு முழுவதுமோ அல்லது
ஒரு
மாநிலத்தில்
அல்லது
ஒரு
தொகுதியில்
தேர்தல்
அறிவிக்கப்பட்டால், தேர்தலை
நியாயமாகவும் அரசியல்
சார்பு
அற்றதாகவும்
நடத்துவதற்காக தேர்தல்
நடத்தை
விதிமுறைகள்
உடனடியாக
அமல்படுத்தப்படுகின்றன.

அந்த வகையில் தமிழகத்தில்
சட்டசபை
தேர்தல்
வரும்
ஏப்ரல்
6
ம்
தேதி
நடைபெற
உள்ளதாக
தேர்தல்
ஆணையம்
அறிவித்துள்ளது. இதன்
காரணமாக
உடனயடியாக
தேர்தல்
நடத்தை
விதிமுறைகள்
அமலுக்கு
வந்துள்ளன.

நடத்தை விதிகள் அமலுக்கு
வந்ததால்
மாநிலத்தில்
உள்ள
சட்டமன்ற
தொகுதி
உறுப்பினர்களின் அலுவலகங்கள்
பூட்டி
சீல்
வைக்கப்படும். தேர்தல்
நடத்தை
விதிகள்
தளர்ந்த
பின்
இந்த
அலுவலகங்கள்
திறக்கப்படும்.

அரசு வாகனங்கள்,

இதேபோல்
நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகமும் அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்படும். தேர்தல் முடிந்த பின்னரே
திறக்கப்படும்.

இதேபோல
ஊராட்சி ஒன்றிய தலைவர்கள்
பயன்படுத்திய அரசு
வாகனங்கள், மாவட்ட ஊராட்சி
தலைவரின் அரசு வாகனங்கள்
உள்ளிட்டவற்றை அரசு
அலுவலகத்தில் ஒப்படைக்க
வேண்டும்.

புகைப்படங்கள் அகற்றம்

அரசியல்
கட்சியினர் விளம்பர படுத்தும்
வகையில் இருக்கும் முதல்வர்,
பிரதமர், அரசியல் கட்சியினரின் முக்கிய தலைவர்கள் உள்பட
தலைவர்களின் புகைப்படங்கள் அல்லது
காலெண்டர்கள் அரசு
அலுவலங்களில் உடனடியாக
அகற்றப்படும்.

பரிசு
பொருட்கள்

இதேபோல்
50000
ரூபாய்க்கு மேல் ரொக்கமாக
வெளியில் எடுத்து சென்றால்
அதற்கு உரிய ஆவணங்களை
காண்பிக்க வேண்டும். வாக்காளர்களை கவரும் நோக்கில் பணம்
அல்லது பரிசு பொருட்கள்
விநியோகிக்க கூடாது. இதை
தடுக்கவே தேர்தல் ஆணையம்
உரிய ஆவணம் இல்லாமல்
பணம் கொண்டு செல்ல
தடை விதித்துள்ளது.

 

அனைத்து
நலத்திட்ட உதவிகள் தேர்தல்
முடிந்து புதிய அரசு
வரும் வரை நிறுத்தப்படும். ரேஷன் கார்டு விண்ணப்பம், முதியோர் உதவி தொகை
விண்ணப்பம், விதவையர் விண்ணப்பம், சமுக நலத்திட்ட உதவிகள்
கோருவது உள்பட அனைத்து
பொதுசேவைகளும் தேர்தலுக்கு பின்னர் புதிய அரசு
அமைந்த பின்னரே செயல்பாட்டிற்கு வரும்.

தடை
இல்லை

சட்டசபை
தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் இப்போது
உள்ள அரசு காபந்து
அரசாக மாறிவிடும். அரசால்
எந்த அறிவிப்பும் புதிதாக
வெளியிட முடியாது. ஏற்கனவே
நிதி ஒதுக்கி செயல்பாட்டில் உள்ள திட்டங்களுக்கு எந்த
தடையும் இல்லை.

தேர்தல் நடத்தை விதிமுறைகள்:

ஆவணங்கள்
இன்றி ரூ.50 ஆயிரம்
வரை மட்டுமே ரொக்கமாக
எடுத்துச் செல்ல அனுமதி
அளிக்கப்பட்டுள்ளது. அதற்க்கு
மேல் பணம் எடுத்துச்செல்வோர், அதற்கான ஆதார
ஆவணங்களையும் உடன்
எடுத்துவர வேண்டிய கட்டாயம்.

கோவில்,
மசூதி, தேவாலயம் போன்ற
வழிபாட்டு தலங்களில், நோட்டீஸ்
ஒட்டுதல், என எந்த
வித தேர்தல் பிரசாரமும் செய்யக் கூடாது.

ஏதேனும்
புகார்கள் என்றால்  1950 என்ற எண்ணில்
பொதுமக்கள் புகார் அளிக்கலாம்.

பிரசார
கூட்டத்தை தேர்தல் நடப்பதற்கு 48 மணி நேரம் முன்பாக
முடித்து கொள்ள வேண்டும்.

தனிநபரின்
விருப்பமின்றி அவரது
வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம், மறியல் நடத்த கூடாது.

ஒரு
கட்சியின் பொதுக் கூட்டம்
நடக்கும் இடத்தில், வேறொரு
கட்சியின் ஊர்வலத்துக்கு அனுமதியில்லை.

ஸ்பீக்கர்களை இரவு 10 மணியில் இருந்து
காலை 6 மணி வரை
பயன்படுத்தக் கூடாது.

இரவு
10
மணிக்கு மேல் கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்த தடை
விதிக்கப்படுகிறது. 

தேர்தல்
நடத்தை விதிமுறைகள் அமலுக்கு
வந்த பின்னர் தேர்தல்
முடியும் வரை, ஆட்சியில்
உள்ள அரசு புதிய
நலத் திட்டங்களை அறிவிக்கக் கூடாது. ஆனால், ஏற்கெனவே
அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்த எந்த தடையும்
இல்லை.

புதிய
கட்டிடங்கள், மேம்பாலங்கள், சாலைகள்
திறப்புவிழா போன்ற ரிப்பன்
வெட்டும் நிகழ்ச்சிகள் எதுவும்
அரசால் நடத்தப்படக்கூடாது.

அரசின்
செலவில் தொலைக்காட்சி, ஊடகங்கள்,
நாளிதழ்களில் விளம்பரம்
செய்யக்கூடாது.

அரசு
ஊழியர்களையோ, அரசு வாகனங்களையோ பரப்புரைக்கு பயன்படுத்தக் கூடாது.

கட்சித்தலைவர்களின் சிலைகள், அரசியல்
கட்சிகளின் சின்னங்கள் போன்றவை
மூடி மறைக்கப்படும்.

தொலைக்காட்சி, கேபிள் நெட்வொர்க், ரேடியோ
போன்றவற்றில் பரப்புரை
விளம்பரங்களை வெளியிட,
அங்கீகரிக்கப்பட்ட அரசியல்
கட்சிகள் 3 நாட்களுக்கு முன்னதாகவே தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும்.

வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் கொடுப்பது, வாக்காளர்களை உணர்வுபூர்வமாக தூண்டிவிடுவது, ஆள்மாறாட்டம் செய்வது,
வாக்குச்சாவடியில் இருந்து
100
மீட்டர் தூரத்திற்குள் வாக்கு
சேகரிப்பது, வாக்குப்பதிவுக்கு முந்தைய
48
மணி நேரங்களுக்குள் பொதுக்கூட்டம் நடத்துவது, வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வருவதற்கான போக்குவரத்து ஏற்பாடுகளை செய்வது போன்ற ஊழல்
நடவடிக்கைகளை கட்சிகள்
மற்றும் வேட்பாளர்கள் தவிர்க்க
வேண்டும்.

To Download PDF: Click
Here

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!