HomeBlogவிடுதிகளில் தங்கி படிக்க மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் - திருப்பத்தூர்

விடுதிகளில் தங்கி படிக்க மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் – திருப்பத்தூர்

 

விடுதிகளில் தங்கி
படிக்க மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
திருப்பத்தூர்

அனைத்து
பகுதியிலும் கொரோனா பரவல்
குறைந்து வரும் நிலையில்
உயர் வகுப்புக்கான பள்ளிகள்
தற்போது தொடங்கப்பட்டு, பாடங்களும் நடத்தப்பட்டு வருகிறது.
தற்போது விடுதியில் தங்கி
படிக்கும் மாணவர்களுக்கு ஓர்
அறிவிப்பு வந்துள்ளது. இதனை
திருப்பத்தூர் மாவட்ட
ஆட்சியர் அறிவித்துள்ளார்.

அவர்
கூறியதாவது:

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள
ஆதிதிராவிடர் நலத்துறையின் கட்டுப்பாடில் இயங்கி
வரும் அரசு மற்றும்
அரசு நிதி உதவி
பெரும் பள்ளிகள் மற்றும்
கல்லூரிகளின் விடுதிகளில் இந்த ஆண்டிற்கான மாணவர்கள்
சேர்க்கை நடைபெற்றுள்ளது. இதற்காக
6-
ம் வகுப்பு முதல்
12-
ம் வகுப்பு வரை
படிக்கும் மாணவர்கள் மற்றும்
உயர்கல்வி படிக்கும் மாணவர்கள்
விண்ணப்பிக்கலாம் என்றும்
தெரிவித்துள்ளார்.

மேலும்
அவர்கள் வரும் மார்ச்
மாதம் 2ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
என்றும் தெரிவித்துள்ளார். விடுதியில் தங்க விரும்பும் மாணவர்கள்
தங்கள் புகைப்படம், ஆதார்,
வங்கிக்கணக்கு புத்தக
நகல், வருமானம் மற்றும்
சாதிச்சான்றிதழ் ஆகியவற்றை
மாவட்ட ஆதிதிராவிடர் நல
தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் வரும் 2ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular