தமிழகத்தில் 9 முதல்
11ம் வகுப்புகளுக்கு கணினி
அடிப்படையிலான தேர்வு
(CBT) – அரசு நடத்தக்கூடும் என
தகவல்
தமிழகத்தில் 9 முதல் 11ம் வகுப்பு
வரை பயிலும் மாணவர்களுக்கு இறுதித்தேர்வுகள் ரத்து
செய்யப்பட்டு உள்ள
நிலையில், அவர்களுக்கு மதிப்பெண்
வழங்குவதற்கு கணினி
அடிப்படையிலான தேர்வினை
(CBT) அரசு நடத்தக்கூடும் என
தகவல்கள் வெளியாகி உள்ளது.
சமீபத்தில், தமிழ்நாடு அரசு 9 முதல்
11 வகுப்புகளைச் சேர்ந்த
மாணவர்கள் எந்தவொரு தேர்வும்
இல்லாமல் தேர்ச்சி வழங்கப்பட்டு உயர் வகுப்புகளுக்கு உயர்த்தப்படுவதாக வெளியான அறிவிப்பு
மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை
எதிர்த்து தனியார் பள்ளி
நிர்வாகங்கள் சார்பில்
போராட்டங்களும் நடத்தப்பட்டன. இப்போது, 9 முதல் 11ம்
வகுப்புகளில் தேர்ச்சி
பெற்ற மாணவர்களுக்கான மதிப்பெண்களைக் கணக்கிடுவது தொடர்பாக பள்ளிகளில் சில குழப்பங்கள் நிலவுகின்றன.
இந்த
மாணவர்களுக்கு குறிப்பாக
அரசு பள்ளிகளுக்கு அவர்களின்
செயல்திறனின் அடிப்படையில் மதிப்பெண்கள் ஒதுக்குவதற்கு கணினி அடிப்படையிலான தேர்வினை
(CBT) தமிழக அரசு நடத்தக்கூடும் என்று கூறப்படுகிறது.
கொரோனா
வைரஸ் தொற்று பரவல்
காரணமாக கடந்த ஆண்டில்
10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் ரத்து
செய்யப்பட்டபோது, அவர்களின்
வருகைப்பதிவேடு மற்றும்
காலாண்டு மற்றும் அரை
ஆண்டு தேர்வுகளின் செயல்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டது. ஆனால்
இந்த ஆண்டில், பள்ளிகள்
மீண்டும் திறக்கப்பட்ட பின்னரும்,
மாணவர்களுக்கு வருகை
கட்டாயமாக்கப்படவில்லை.
மேலும்
பொதுத்தேர்வு மாணவர்களுக்கான பாடத்திட்டங்களை முடிப்பதில் ஆசிரியர்கள் மும்முரமாக ஈடுபட்டு
இருந்தனர். இதன் காரணமாக
பெரும்பாலான பள்ளிகள் மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வுகளை நடத்தவில்லை. இருப்பினும், சில தனியார்
பள்ளிகள் இத்தேர்வுகளை நடத்தியுள்ளன.
பள்ளிக் கல்வித்துறையைச் சேர்ந்த மூத்த
அதிகாரி ஒருவர் கூறுகையில்:
அரசு
பள்ளிகளின் கணினி ஆய்வகங்களில் கணினி அடிப்படையிலான தேர்வுகளை
(CBT) நடத்துவது குறித்து அதிகாரிகள் கலந்துரையாடி வருவதாக
தெரிவித்துள்ளார். இதன்
அடிப்படையில் ரத்தான
தேர்வுகளுக்கான மதிப்பெண்களைக் கணக்கிடுவதற்கான வழிகாட்டுதல்களை அரசு அறிவிக்கும் என்று
கூறப்படுகிறது.
கணினி
அடிப்படையிலான தேர்வில்
அந்தந்த பள்ளிகளிலேயே மாணவர்கள்
கலந்து கொள்ளலாம் என்று
அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார். மதிப்பெண் பட்டியலைத் தயாரிப்பதற்காக தனியார்
பள்ளிகள் தாங்களாகவே கணினி
அடிப்படையிலான தேர்வுகளை
நடத்தி அதன் அடிப்படையில் மதிப்பெண்களை அரசுக்கு
வழங்கவும் அறிவுறுத்தப்பட உள்ளதாக
தகவல்கள் தெரிவிக்கின்றது.