HomeBlogதமிழகத்தில் குழந்தை தொழிலாளர்களுக்கு கட்டாயக் கல்வி – உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் குழந்தை தொழிலாளர்களுக்கு கட்டாயக் கல்வி – உயர் நீதிமன்றம் உத்தரவு

 

தமிழகத்தில் குழந்தை
தொழிலாளர்களுக்கு கட்டாயக்
கல்விஉயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாடு
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை தலைமை செயலாளர்,
தமிழகத்தில் உள்ள குழந்தை
தொழிலாளர்களை மீட்டெடுத்து கட்டாயக்கல்வி அளிக்க
வேண்டும் என உயர்
நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் குழந்தை தொழிலாளர்களை மீட்டெடுத்து கல்வி வழங்க வேண்டும்
என மதுரையை சேர்ந்த
ராஜா என்பவர் மதுரை
உயர் நீதிமன்றத்தில் வழக்கு
தொடர்ந்தார்.

அவர்
அளித்த மனுவில் குறிப்பிட்டவை:

தமிழகத்தில் 14 வயதிற்கு கீழ் உள்ள
குழந்தைகள் குடும்ப சூழ்நிலை
காரணமாக குழந்தை தொழிலாளர்களாக மாற்றப்பட்டவர்களை மீட்டெடுத்து அவர்களுக்கு முறையான கல்வி
வழங்க வேண்டும்.

இதன்
பணியை ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள குழந்தை பாதுகாப்பு மற்றும் குழந்தை தொழிலாளர்கள் முறையை கண்காணிக்கும் அதிகாரிகள் முறையாக செய்ய வேண்டும்.
குழந்தை பாதுகாப்பு சட்டத்தின் படி டெல்டா பகுதிகளில் உள்ள குழந்தை தொழிலாளர்கள் மற்றும் சட்டவிரோதமாக உள்ள
நடவடிக்கைகளில் குழந்தைகளை பயன்படுத்துவபர்கள் மீது
நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
அவ்வாறு மீட்கப்பட்ட குழந்தைகள் மறுவாழ்வுக்காக அரசு
தரப்பில் ரூ.2 லட்சம்
நிதி ஒதுக்க வேண்டும்.
அந்த குழந்தைகளுக்கு கல்வி
வழங்க கட்டாயக்கல்வி திட்டத்தை
அமல்படுத்த வேண்டும். மேலும்
அவர்களுக்கு பிரதமரின் அவாஸ்
யோஜனா திட்டத்தின் கீழ்
நிதியுதவி மற்றும் வீடு
வழங்க வேண்டும்.

இந்த
மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ்,
ஆனந்தி ஆகியோர் முன்
விசாணைக்கு வந்தது அவர்கள்
இந்த வழக்கு குறித்து
தமிழ்நாடு தொழிலாளர் மற்றும்
வேலைவாய்ப்புத்துறை தலைமை
செயலாளர் பதிலளிக்க வேண்டும்
என உத்தரவிட்டு இந்த
வழக்கு விசாரணையை மார்ச்
30
ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular