HomeBlogநோபல் பரிசு 2021-க்கு 329 பேர் பரிந்துரை

நோபல் பரிசு 2021-க்கு 329 பேர் பரிந்துரை

 

நோபல் பரிசு 2021க்கு
329
பேர் பரிந்துரை

2021ஆம்
ஆண்டுக்கான நோபல் பரிசுக்கு
அமெரிக்க முன்னாள் அதிபர்
டிரம்ப், சூழலியல் செயற்பாட்டாளர் கிரேட்டா துன்பெர்க் உள்ளிட்ட
329
பேர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

உலக
அளவில் இயற்பியல், அமைதி,
வேதியியல், மருத்துவம், இலக்கியம்
உள்ளிட்ட துறைகளில் தலைசிறந்து விளங்குபவர்களை அங்கீகரிக்கும் விதமாக நோபல் பரிசு
ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

மிக
மதிப்பு வாய்ந்த விருதாக
கருதப்படும் இந்த பரிசுக்கு
பல்வேறு அமைப்புகள் மற்றும்
தனிநபர்கள் பரிந்துரைக்கப்படுவது வழக்கம்.
இந்நிலையில் 2021ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுக்கு இதுவரை
329
பேர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக நோபல்
கமிட்டி தெரிவித்துள்ளது.

இதில்
அமெரிக்க முன்னாள் அதிபர்
டொனால்ட் டிரம்ப், ஸ்வீடன்
நாட்டைச் சேர்ந்த சூழலியல்
செயற்பாட்டாளர் கிரேட்டா
துன்பெர்க், ரஷிய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி
உள்ளிட்ட பலர் இடம்பெற்றுள்ளனர்.

2021 நோபல்
பரிசுக்கு 234 தனிநபர்களும், 95 அமைப்புகளும் பரிந்துரைக்கப்பட்டுள்து குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular