வாக்காளர் அட்டை
இல்லையா…? இ–வாக்காளர்
அட்டை பெற்றிடலாம் வீட்டில்
இருந்தபடியே…
நாடு
முழுவதும் டிஜிட்டல் முறையில்
வாக்காளர் அடையாள அட்டை
பெறும் திட்டத்தை இந்திய
தேர்தல் ஆணையம் அறிமுகம்
செய்துள்ளது.
இனிமே
வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பித்து நீண்ட நாட்களாக வரவில்லை
என்ற கவலை உங்களுக்கு வேண்டாம்.
இந்த
மாதம் முதல் டிஜிட்டல்
முறையில் வாக்காளர் அடையாள
அட்டை பெறும் திட்டத்தை
தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி
ஆதார் அட்டையை ஆன்லைன்
மூலமாக பதிவிறக்கம் செய்வது
போல், இந்த ஆண்டு
முதல் வாக்காளர் அட்டையை
பதிவிறக்கம் செய்து கொள்ளும்
வசதியை அறிமுகம் செய்துள்ளது.
மேலும்
வாக்காளர் இறுதிப் பட்டியலில் சேர்ந்த புதிய வாக்காளர்கள், தங்களது வாக்காளர் அட்டை
எண் அல்லது படிவம்
6 எண்ணை பயன்படுத்திய ஆன்லைன்
மூலமாக EPIC என்னும் வாக்காளர்
அட்டையை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
அதற்கு
https://eci.gov.in/e-epic/ என்ற
இணையதள முகவரியில் சென்றே
வாக்காளர் அட்டையை பதிவிறக்கம் செய்யலாம்.
இதனை
அடுத்து தமிழகத்தில் நடைபெற
இருக்கும் சட்டமன்ற தேர்தலை
முன்னிட்டு வாக்காளர்களுக்கு இலவசமாக
வண்ண வாக்காளர் அடையாள
அட்டையை வீட்டிற்கே இலவசமாக
அஞ்சல் மூலம் அனுப்பி
வைக்கும் திட்டத்தை இந்திய
தேர்தல் ஆணையம் அறிமுகம்
செய்துள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


