தமிழக நுகர்வோர்
குறைதீர்மன்ற பணியிடங்கள் – விரைவில் நிரப்ப உத்தரவு
தமிழகத்தில் உள்ள 32 நுகர்வோர் குறைதீர்
மன்றங்களில் காலியாக உள்ள
தலைவர், உறுப்பினர் உள்ளிட்ட
பணியிடங்களை நிரப்ப எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து
தேர்வுக்குழு தலைவருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் மொத்தம்
32 நுகர்வோர் குறைதீர் மன்றங்கள்
உள்ளன. ஒவ்வொரு மன்றத்திலும் 1 தலைவர் மற்றும் 2 உறுப்பினர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆனால்
பல மாவட்டங்களில் உள்ள
மன்றங்களில் தலைவர், உறுப்பினர் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக
உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்
காரணமாக தொலைத் தொடர்பு, வங்கி, காப்பீடு,
மின்வாரியம், மருத்துவம் உள்ளிட்ட
துறைகளில் சேவை குறைபாடுகள் தொடர்பான வழக்குகள் தேக்கமடைந்து உள்ளன.
எனவே
இது குறித்து தமிழக
அரசிடம் பல முறை
மனு வழங்கப்பட்டு எந்த
நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே தமிழகத்தில் உள்ள நுகர்வோர் குறைதீர்
மன்றங்களில் காலியாக உள்ள
தலைவர், உறுப்பினர் பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும்.
இவ்வாறு
குறிப்பிட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த
வழக்கை விசாரித்த நீதிபதிகள் நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் காலியாக உள்ள இடங்களை
நிரப்ப எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கையை நுகர்வோர்
குறைதீர் மன்ற தேர்வுக்குழு தலைவர் சமர்ப்பிக்க வேண்டும்
என உத்தரவிட்டுள்ளனர்.