HomeBlogதமிழக பள்ளி மாணவர்களுக்கு படைப்புத்திறன் போட்டி – முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு
- Advertisment -

தமிழக பள்ளி மாணவர்களுக்கு படைப்புத்திறன் போட்டி – முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு

 

Creativity Competition for Tamil Nadu School Students - Principal Education Officer Announcement

தமிழக பள்ளி
மாணவர்களுக்கு படைப்புத்திறன் போட்டிமுதன்மை கல்வி
அலுவலர் அறிவிப்பு

இந்திய
பிரதமருடன் இணையவழி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து
கொள்ள பள்ளி மாணவர்களுக்கு படைப்புத்திறன் தேர்வுகள்
பிப்ரவரி 18 ஆம் தேதி
முதல் தொடங்கி மார்ச்
14
ஆம் தேதி வரை
நடைபெறும் என பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

பள்ளிகளில் மாணவர்களுக்கு தேர்வு
அச்சத்தை போக்க ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர்கள் இந்திய
பிரதமர் மோடியுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சியை மத்திய கல்வித்துறை ஆண்டு தோறும் மார்ச்
மாதம் தொடக்கத்தில் நடத்துகிறது, இந்நிலையில் இந்த ஆண்டு
கொரோனா காரணமாக மார்ச்
மாதம் 3 ஆம் வாரத்தில்
நடத்தப்படுகிறது.

இந்த
இணையவழி கலந்துரையாடலில் கலந்து
கொள்ள 2 ஆயிரம் மாணவர்களை
தேர்வு செய்ய படைப்புத்திறன் போட்டி நடத்தப்படுகின்றன. இந்த
ஆண்டு இந்த போட்டிகள்
பிப்ரவரி 18 ஆம் தேதி
தொடங்கப்பட்டு மார்ச்
மாதம் 14 ஆம் தேதி
வரை நடைபெற உள்ளது.
இந்த தேர்வுகள் https://www.innovateindia.mygov.in/
என்ற இணையதளத்தில் நடைபெற்று
வருகின்றன.

இந்த
போட்டித்தேர்வுகளில் 9 மற்றும்
10
ஆம் வகுப்பு மாணவர்கள்,
பெற்றோர்கள் கலந்துகொள்ளலாம். இந்த
போட்டியில் கலந்து கொள்ளும்
அனைவருக்கும் தேசிய
கல்வி மற்றும் ஆராய்ச்சி
மற்றும் கவுன்சில் இயக்கத்தால் சான்றிதழ் வழங்கப்படும். இந்த
தேர்வுகளில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் கேள்விகள் முன்வைக்கப்பட்டு அதற்கு பிரதமர்
பதில் அளிப்பார். இந்த
கலந்துரையாடல் நிகழ்ச்சி
குறித்து அனைத்து பள்ளிகளுக்கும் தெரிவிக்க வேண்டும் என
மாவட்ட முதன்மை கல்வி
அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -