HomeBlog7வது ஊதியக்குழு – ஏப்ரல் 1 முதல் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் ஏற்பட உள்ள மாற்றங்கள்

7வது ஊதியக்குழு – ஏப்ரல் 1 முதல் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் ஏற்பட உள்ள மாற்றங்கள்

7வது ஊதியக்குழுஏப்ரல் 1 முதல் அரசு
ஊழியர்களின் சம்பளத்தில் ஏற்பட
உள்ள மாற்றங்கள்

மத்திய
அரசு நாடு முழுவதும்
ஏப்ரல் 1 ஆம் தேதி
முதல் புதிய தொழிலாளர்
சட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த
திட்டத்தை செயல்படுத்துவது மூலமாக
வருங்கால வைப்பு நிதி
அதிகமாகவும், சம்பளம் குறைவாகவும் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

புதிய
தொழிலாளர் சட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய
வழிகாட்டு நெறிமுறைகள்:

  • நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட New Wage Code Bill மசோதா மூலமாக
    PF, Gratuity, Dearness Allowance, Travel Allowance
    மற்றும்
    House Rent Allowance
    அனைத்தும் மாற்றப்படும்.
  • புதிய தொழிலாளர்
    சட்டத்தின் மூலமாக PF, Gratuity,
    Dearness Allowance, Travel Allowance
    மற்றும் House Rent
    Allowance
    என அனைத்தும் 50 சதவிகிதத்திற்கு மேல் இருக்காது என
    தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • புதிய தொழிலாளர்
    விதியின் படி அடிப்படை
    சம்பளத்தின் பங்கு 50 சதவீதம்
    அல்லது அதற்கு மேற்பட்டதாக இருக்க வேண்டும். அவ்வாறு
    இல்லமல் சம்பள பங்கு
    50
    சதவிகிதத்திற்கு குறைவாக
    இருந்தால் அவை விரைவில்
    மாறிவிடும், மேலும் உங்களது
    அடிப்படை சம்பளத்துடன் CTC மேலும்
    அதிகரிக்கும்.
  • புதிய சட்டம்
    நடைமுறைக்கு வந்த பின்
    Take Home Salary
    குறைவாக இருக்கும். ஏனெனில்
    அடிப்படை சம்பளம் 50 சதவிகிதத்திற்கு கீழ் இருக்கும் போது
    அதில் 12 + 12 = 24 சதவீதம்
    உங்கள் PF கணக்கிற்கு மாற்றப்படும்.
  • தற்போது அடிப்படை
    சம்பளத்தில் PF 12 சதவிகிதமாக உள்ளது.
    அடிப்படை சம்பளம் CTC இல்
    50
    சதவீதமாக மாறும்போது PF மதிப்பு
    அதிகரிக்கும்.
  • புதிய தொழிலாளர்
    சட்டங்களில் கிராச்சுட்டியின் புதிய
    விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே
    இருந்த விதிகளின் படி
    5
    ஆண்டுகள் பணிபுரிந்த ஊழியர்களுக்கு கிராச்சுட்டி வழங்கப்படும். ஆனால் புதிய தொழிலாளர்
    சட்டத்தின் படி 1 ஆண்டுகள்
    பணிபுரிந்தாலே கிராச்சுட்டி வழங்கப்படும்.
  • தொழிலாளர் சட்டங்களில் காலத்திற்கு ஏற்ப தெரிவிக்கப்பட்ட ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று
    அரசாங்கம் நடைமுறைப்படுத்துகிறது. முதலாளி
    மற்றும் பணியாளர் ஆகிய
    இருவரையும் புதிய தொழிலாளர்
    சட்டம் மூலமாக கவனித்து
    வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. 
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular