வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருந்தால் மட்டுமே நீங்கள் வாக்களிக்க முடியும். எனவே, வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்று சரிபார்த்து விட்டீர்களா?
உங்கள் கையில் வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும் கூட, தேர்தல் ஆணையம் அங்கீகரித்திருக்கும் 11 அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒன்றைக் காட்டி நீங்கள் வாக்களிக்க முடியும். ஆனால், உங்கள் கையில் வாக்காளர் அடையாள அட்டை இருந்தாலும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையென்றால் (முகவரி மாற்றம் போன்றவற்றால் திருத்தம் அல்லது நீக்கப்பட்டிருக்க வாய்ப்பு) வாக்களிக்க இயலாது.
தேர்தல் ஆணையம் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிடும்போது, அதில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை சரிபார்க்கத் தவறியவர்களுக்காக தேர்தல் ஆணையம் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது.
அதன்படி, வாக்காளர் உதவி தொலைபேசி எண்ணை 1950-இல் தொடர்பு கொண்டு, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணைக் கொடுத்து, வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை சரிபார்த்துக் கொள்ளலாம்.
அல்லது, 1950 என்ற இலவச சேவைக்கு குறுந்தகவல் அனுப்பியும் அறிந்து கொள்ளலாம்.
அதற்கு, <ECI> Space <EPIC NO> என்று செல்லிடப்பேசியில் பதிவிட்டு, 1950 என்ற எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பலாம். EPIC NO என்றால் உங்களது வாக்காளர் அடையாள அட்டையில் இருக்கும் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும்.
அதுமட்டுமா? உங்கள் செல்லிடப்பேசியில் வாக்காளர் உதவி செயலியை பதிவிறக்கம் செய்தும், அதன் மூலம் அறியலாம்.
இன்னும் எளிதாக, www.nvsp.in என்ற இணையதளத்துக்குச் சென்று, அங்கு உங்கள பெயரை வாக்காளர் பட்டியலில் சரிபார்த்துக் கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


