ஊக்கத்தொகையுடன் கூடிய
இலவச சுயதொழில் பயிற்சி
மத்திய
மற்றும் மாநில அரசுடன்
இணைந்து இலவச சுயதொழில்
பயிற்சி மதுரையில் நடக்க
உள்ள நிலையில் கிராமப்புற மாணவர்களுக்கு உதவித்தொகையுடன் பயிற்சி வழங்கப்பட உள்ளதாகவும், ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய
மற்றும் மாநில அரசுகள்
நாட்டில் உள்ள படித்த
மற்றும் படிக்காத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும்
அவர்களின் திறன்களை வளர்த்துக் கொள்வதற்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இதில் கலந்து கொள்ளும்
மாணவர்களுக்கு இலவச
பயிற்சியுடன் உதவித்தொகையும் வழங்கப்படுகிறது.
மதுரையில்
உள்ள கிராமப்புற மாணவர்களுக்கு மத்திய மற்றும் மாநில
அரசுகளுடன் இணைந்து பெட்கிராப்ட் நிறுவனம் இலவச திறன்
மேம்பாட்டு பயிற்சி வழங்க
உள்ளது. இந்த பயிற்சிகள் பெட்கிராப்ட் நிறுவனத்தின் சுயதொழில் பயிற்சி மையத்தில்
நடக்கிறது. இதில், கணினி
பயிற்சி, தையல் பயிற்சிகள் முதல் கட்டமாக வழங்கப்பட
உள்ளது. இதற்கு பயிற்சிகள் தொடர்ந்து நான்கு மாத
காலம் நடத்தப்படும்.
திறன்
மேம்பாட்டு பயிற்சியின் ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணவேணி அவர்கள்,
இலவச பயிற்சிக்கு நாள்
ஒன்றுக்கு ரூ.125 ஊக்கத் தொகையாகவும், பயிற்சிக்கான புத்தகங்கள் மற்றும் சீருடையும் வழங்கப்படும்.
18 முதல்
35 வயது வரையுள்ள 10ம்
வகுப்பு படித்த ஆண்,
பெண் இருபாலரும் இந்த
பயிற்சில் கலந்து கொள்ளலாம்.
மேலும்
தகவல்களை 8903003090 என்ற
எண்ணில் தெரிந்து கொள்ளலாம்.