HomeBlogரயில் பயணச்சீட்டு வழங்க புதிய தொழில்நுட்பம் அறிமுகம்

ரயில் பயணச்சீட்டு வழங்க புதிய தொழில்நுட்பம் அறிமுகம்

 

ரயில் பயணச்சீட்டு வழங்க புதிய தொழில்நுட்பம் அறிமுகம்

இந்தியாவின் அனைத்து பகுதியில் உள்ள
மக்களும் ரயில்வே துறையால்
பயனடைந்து வருகின்றனர். மத்திய
அரசும் ரயில்வே துறையில்
பல முக்கிய மாற்றங்களை செய்து வருகின்றது.

பாரத
பிரதமர் மோடி அவர்கள்
சமீபத்தில் டெல்லியில் ஆளில்லா
ரயில் திட்டத்தை தொடங்கி
வைத்தார். மேலும், இந்தியாவின் முக்கிய நகரங்கள் அனைத்திற்கும் மெட்ரோ திட்டத்தையும் தொடங்கி
வைத்துள்ளார்.

தெற்கு
ரயில்வே பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்குவதற்கான சாதனை
மேலாண்மை திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த புதிய
திட்டத்திற்கான மென்பொருள் ரயில்வே துறையால் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தத்தக்கது. புதிய மென்பொருளுக்காக தனியாக செலவுகள் ஏதும்
ஏற்படவில்லை என்றும் தெற்கு
ரயில்வே அறிவித்துள்ளது.

புதிய
தொழில்நுட்பத்தின் மூலம்
கணினி முன்பதிவு முறையில்
பயணச் சீட்டுகள், முன்பதிவில்லா பயணச் சீட்டுகள் வழங்கும்
முறையில் ஏதேனும் தொழிநுட்பக் கோளாறுகள் ஏற்பட்டால் உடனடியாக
இணையவழியாகவே அதனை
சரி செய்ய முடியும்.

பழைய
முறையினால் கால தாமதமாக
தான் பழுதுகள் சரி
செய்ய முடிந்தது. புதிய
தொழில் நுட்பத்தின் மூலமாக
பிரச்னைகள் எளிதாக தீர்வு
காணப்படும் என்று ரயில்வே
நிர்வாகம் அறிவித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular