TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
தமிழகத்தில் March
17 தேதி முதல் முன்பதிவு
இல்லாத ரயில் சேவை
தொடக்கம்
தமிழகத்தில் CORONA காரணமாக மார்ச்
மாதம் முதல் முழு
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனை
தொடர்ந்து போக்குவரத்து குறிப்பாக
பேருந்து, ரயில் சேவையும்
நிறுத்தப்பட்டன. படிப்படியாக பேருந்து சேவை தொடங்கப்பட்டது. புலம்பெயர் தொழிலாளர்களுக்கான ரயில்
சேவையை மத்திய அரசு
அதன்பின் அறிவித்தது.
பல்வேறு
தளர்வுகளுக்கு பின்
போக்குவரத்து சேவை
தொடங்கப்பட்டது. தற்போது
போக்குவரத்து சேவை
இயல்பு நிலைக்கு வந்துள்ளது. ஆனால் ரயில் பயணம்
செய்பவர்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே கொரோனா கட்டுப்பாடு விதிகளுடன் பயணம் செய்ய
அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால்
சாமானிய மக்கள் பெரிதும்
பாதிக்கப்படுகின்றனர். முன்பதிவு
இல்லாத ரயில் சேவை
எப்போது தொடங்கப்படும் என்பது
அவர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.
இந்நிலையில் தற்போது தெற்கு ரயில்வே
March மாதம் 17 தேதி
முதல் முன்பதிவு இல்லாமல்
ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரயில்களில் பட்டியல் வெளியிட்டுள்ளது. அவை, ரயில் எண்
06867 / 06868 – விழுப்புரம் to மதுரை, ரயில்
எண் 06087 / 06088 – அரக்கோணம்
– சேலம், ரயில் எண்
06115 / 06116 – எழும்பூர் to புதுச்சேரி to சென்னை
எழுப்பூர் சிறப்பு ரயில்,
ரயில் எண் 06327 – 06328 புனலூர்
to குருவாயூர் சிறப்பு ரயில்.
இந்த
ரயில்களில் பயணம் செய்ய
இன்று (March 15) முதல்
டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன. மேலும் இதற்கான
டிக்கெட்டுகளை ரயில்
இயங்கப்படும் வழித்தடங்களில் உள்ள ரயில் நிலையங்களில் பெற்றுக் கொள்ளலாம் என
தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.


