தர்மபுரி மாவட்ட, தமிழ்நாடு கட்டுமான கழக தொழிலாளர் சங்க உதவி ஆணையர் முத்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:தமிழ்நாடு கட்டுமான கழகம் சார்பில், கட்டுமான தொழிலாளர்களுக்கு, 3 மாதம் மற்றும் ஒரு வாரகால திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இதில், கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து, மூன்று ஆண்டு மூப்பு பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு, ஐந்து முதல் பிளஸ் 2 வரை படித்திருக்க வேண்டும். ஐ.டி.ஐ., படித்தவர்களும் இதற்க்கு விண்ணப்பிக்கலாம். இவர்கள் தமிழ் மொழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
கொத்தனார், வெல்டர், மின்சார பயிற்சி, குழாய் பொருத்துதல், மரவேலை கம்பி வளைப்பவர் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படும். பயிற்சி கட்டணம், தங்குமிடம் இலவசமாக வழங்கப்படும்.பயிற்சி பெரும் அனைவருக்கும் எல் அண்ட் டி கட்டுமான திறன் பயிற்சி நிலையத்தால், 100 சதவீதம் வேலை வழங்கப்படும். ஒருவார கால திறன்மேம்பாட்டு பயிற்சியில் பங்கேற்க்கும் அனைவருக்கும், 800 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள், தங்களது நலவாரிய அட்டை, கல்வி சான்று, ஆதார் மற்றும் ரேசன் கார்டு ஆகிய நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 04342 – 233771, 04343 – 231321 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


