வீரபாண்டி அருகே தப்புக்குண்டு சாலையில் உள்ள, போடி அரசுத் தொழில் பயிற்சி நிலையத்தில் 2023-2024 ஆம் கல்வி ஆண்டுக்கான நேரடி மாணவ, மாணவியா் சோக்கை நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: எஸ்.எஸ்.எல்.சி., தோச்சி பெற்ற மாணவ, மாணவிகள் உரிய அசல் சான்றிதழ்களுடன் நேரடியாக விண்ணப்பிக்கலாம். பயிற்சி காலத்தில் மாணவா்களுக்கு மாதம் ரூ.750 உதவித் தொகை, மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டத்தின் கீழ், மாதம் ரூ.1,000 உதவித் தொகை, விலையில்லா மிதிவண்டி, மடிக் கணினி, சீருடை, காலணி, பாடப் புத்தகம், வரைபடக் கருவி, பேருந்து பயண அட்டை ஆகியன வழங்கப்படும். தொழில் பயிற்சி நிலைய மாணவா் சோக்கை குறித்த விவரங்களை போடி தொழில் பயிற்சி நிலைய அலுவலகம், கைப்பேசி எண்கள்: 94990 55768, 94550 55769, 80150 32304 ஆகியவற்றில் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram


