ஓமலுார் – மாடித்தோட்டம் அமைக்க பயிற்சி அளிக்கப்பட உள்ளதால், விருப்பம் உள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.இதுகுறித்து ஓமலுார் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சக்ரவர்த்தி அறிக்கை:தோட்டக்கலைத்துறை, மலைப்பயிர்கள் துறை சார்பில், ஜூலை, 24ல், ஓமலுார் பி.டி.ஓ., அலுவலகத்தில் மாடித்தோட்டம் அமைக்க பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
விருப்பமுள்ள, 50 பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பயிற்சியில் தக்காளி, கத்திரி, மிளகாய், கொடிக்காய்கறி, பல்வேறு வகை கீரை வகைகள் சாகுபடி செய்வது குறித்து செயல் விளக்கத்துடன் பயிற்சி வழங்கப்பட உள்ளது.மாடித்தோட்டம், ‘கிட்’ தேவைப்படும் பயனாளிகள் ஆதார், புகைப்படத்துடன் பயிற்சியில் பங்கேற்று முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். செடிகள் வளர்ப்பு பை, தென்னை நார் கழிவு, காய்கறி விதை, உயிர் உரங்கள், வேப்ப எண்ணை உள்ளிட்டவற்றின், ‘கிட்’ விலை, 900 ரூபாய். மானிய விலையில், 450 ரூபாய்க்கு வழங்கப்பட உள்ளது. விபரங்களுக்கு, 98844 02623 என்ற எண்ணில் அழைக்கலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


