மொபைல் மூலமே
ரேஷன் பொருட்களை பெற்றுக்
கொள்ளலாம்
இந்தியாவில் எந்த பகுதியில் உள்ள
ரேஷன் கடைகளில் இருந்தும்
ஒரு இந்தியக் குடிமகன்
ரேஷன் பொருட்களை பெறும்
வகையில் ஒரே நாடு
ஒரே ரேஷன் திட்டம்
இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதன்
மூலம் யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் உணவுப்
பொருட்களை வாங்கிக் கொள்ள
முடியும். புலம் பெயர்
தொழிலாளர்களின் நலனைக்
கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது.
இந்நிலையில் மத்திய அரசு மேரா ரேஷன் ஆப்
என்ற புதிய செயலியை
அறிமுகம் செய்துள்ளது. இந்த
ஆப் மூலம் பக்கத்தில் உள்ள ரேஷன் கடை,
என்ன பொருட்கள் இருப்பில்
உள்ளது என்பது குறித்த
முழு தகவல்களையும் தெரிந்து
கொள்ளலாம்.
சமீபத்தில் வாங்கிய பொருட்கள் மற்றும்
பரிவர்த்தனைகள், ஆதார்
இணைப்பு நிலவரம் ஆகிய
வசதிகளை பெற முடியும்.கூகுள்
ப்ளே ஸ்டோரில் இந்த
ஆப்பை ஸ்மார்ட் போனில்
இன்ஸ்ட்டால் செய்து விரல் நுனியிலேயே பெற
முடியும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


