பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள அரசு தொழில்பயிற்சி நிலையங்களில் 2023 ஆம் ஆண்டுக்கான நேரடி சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் க.கற்பகம் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள அரசு தொழில்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது. பயிற்சியில் பங்கேற்க விரும்புவோா் தங்களது அசல் கல்விச் சான்றிதழ்களுடன் நேரில் வரவும். ஏற்கெனவே பயிற்சியாளா்கள் சேர்க்கை நடைபெற்றதில், எஞ்சியுள்ள காலியிடங்களுக்கு மட்டுமே நேரடி சேர்க்கை நடைபெறுகிறது.
காலியிடங்கள் மிகக் குறைவாக உள்ளதால், முதலில் வருபவா்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் சேர்க்கை நடைபெறுகிறது. கல்வித் தகுதி 8- ஆம் வகுப்பு அல்லது எஸ்எஸ்எல்சி தோச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ. 50, சேர்க்கை கட்டணமாக ஓராண்டு தொழில்பிரிவு பயிற்சிக் கட்டணம் ரூ.185, இரண்டாண்டு தொழில்பிரிவு பயிற்சிக் கட்டணம் ரூ. 195 செலுத்த வேண்டும்.
சேர்க்கையின்போது 8-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் அல்லது எஸ்எஸ்எல்சி மதிப்பெண் சான்றிதழ், பள்ளி மாற்றுச்சான்றிதழ், ஆதாா் அட்டை, சாதிச் சான்றிதழ், புகைப்படம் -3 ஆகியவற்றை கொண்டு வரவேண்டும்.
இணையதளம் வாயிலாக நேரடி சேர்க்கை ஜூலை 31 ஆம் தேதி வரை நடைபெறும். மேலும் விவரங்களுக்கு, பெரம்பலூா் அரசு தொழில்பயிற்சி நிலைய மின்னஞ்சல் முகவரி 94990 55881,94990 55852 ஆகிய கைப்பேசி எண்ணிலும், ஆலத்தூா் அரசு தொழில்பயிற்சி நிலைய மின்னஞ்சல் முகவரி 94990 55881 என்னும் எண்ணிலும், குன்னம் அரசு தொழில்பயிற்சி நிலையம் மின்னஞ்சல் முகவரி , 90479 49366 ஆகிய எண்ணிலும், மாவட்டத் திறன் பயிற்சி அலுவலக மின்னஞ்சல் முகவரி 94884 51405 என்னும் எண்ணிலும் தொடா்புகொண்டு பயன்பெறலாம் எனத் தெரிவித்துள்ளாா்.