HomeBlogசென்னை ஐஐடி M.A., பட்டப்படிப்பு - நுழைவுத் தேர்வு - விண்ணப்ப பதிவு துவக்கம்

சென்னை ஐஐடி M.A., பட்டப்படிப்பு – நுழைவுத் தேர்வு – விண்ணப்ப பதிவு துவக்கம்

 

சென்னை ஐஐடி
M.A., பட்டப்படிப்புநுழைவுத் தேர்வுவிண்ணப்ப
பதிவு துவக்கம்

இந்தியாவில் உள்ள முன்னணி கல்வி
நிறுவனங்களில் ஒன்றான
சென்னையில் செயல்பட்டு வரும்
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப்
டெக்னாலஜி (IIT) 2001 ஆம்
ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த
கல்லூரியில் டிப்ளமோ, சான்றிதழ்,
இளநிலை மற்றும் முதுகலை
பட்ட படிப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் அங்கு
எம். படிப்புகளுக்கான 2021-22 ஆம் ஆண்டு
மாணவர் சேர்க்கை வழங்க
ஹுமானிட்டீஸ் அண்ட்
சோசியல் சயின்சஸ் என்ட்ரன்ஸ் எக்சாமினேஷன் (HSEE) நுழைவுத்
தேர்வுகள் நடத்தப்படும்.

இந்த
நுழைவுத் தேர்வில் தேர்ச்சி
பெற்றவர்களுக்கு மட்டுமே
மாணவர் சேர்க்கை வழங்கப்படும். இந்த ஆண்டு நடத்தப்படும் நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த
படிப்புகளில் சேர
நுழைவுத் தேர்வுக்கான கல்வித்தகுதியாக 2020 அல்லது 2021ஆம்
கல்வியாண்டில் 12 ஆம்
வகுப்பு தேர்ச்சி அல்லது
அதற்கு இணையான படிப்பு
முடித்திருக்க வேண்டும்.

இந்த
நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க சென்னை IIT.,யின்
அதிகாரபூர்வ இணையதளம் மூலமாக
மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
மேலும் இதற்கான கடைசி
தேதி மார்ச் 31 ஆகும்.
மேலும் நுழைவுத்தேர்வு ஜூன்
மாதம் 13ஆம் தேதி
நடைபெற உள்ளது. இது
குறித்த விண்ணப்பங்களை http://hsee.iitm.ac.in/ என்ற
இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular