தேர்தல் பாதுகாப்பு பணிகளில் கல்லூரி மாணவர்கள்
– தூத்துக்குடி காவல்
கண்காணிப்பாளர்
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் மாதம் 6 ஆம்
தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில் தேர்தல் ஆணையமும்,
கட்சியினரும் தேர்தலுக்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு
வருகின்றனர். பொதுவாக சட்டமன்ற
தேர்தலில் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் தேர்தல் பணியில்
ஈடுபடுத்தப்படுவார்கள். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் நாட்டு
நலப்பணி திட்ட மாணவர்களை
தேர்தல் பாதுகாப்பு பணியில்
காவல்துறையினருக்கு உதவியாக
ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இது
குறித்து தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் நாட்டு
நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் பங்குபெற்ற கூட்டம்
மாவட்ட தலைமை கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற்றது.
அதில்
தேர்தல் பணியில் ஈடுபட
உள்ள மாணவர்கள் மற்றும்
முன்னாள் படை வீரர்களுக்கான அஞ்சல் வாக்குப்பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்ய காவல்
ஆய்வாளர் ஏழுமலை நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும்
தேர்தல் பாதுகாப்பு பணிகளில்
ஈடுபட உள்ள மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும்
செய்து கொடுக்க வேண்டும்
என அனைத்து தொகுதி
தேர்தல் ஆய்வாளர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் பணிகளில்
மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டால் அவர்களுக்கு தேர்தல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என
எதிர்பார்க்கப்படுகிறது.