சட்ட படிப்புகளுக்கான CLAT நுழைவுத் தேர்வு
– விண்ணப்பிக்க ஏப்ரல்
30 கடைசி நாள்
நாடு
முழுவதும் உள்ள 22 தேசிய
சட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும்
40க்கு அதிகமான கல்வி
நிறுவனங்களில் சட்டபடிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை
வழங்க CLAT தேர்வில் தேர்ச்சி
பெறுவது கட்டாயமாகும். சட்டபடிப்புகளில் இளநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை வழங்க
CLAT-UG தேர்வும், முதுகலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை வழங்க
CLAT-PG தேர்வும் நடத்தப்படுகின்றன.
தற்போது
2021-2022 ஆம் கல்வியாண்டிற்கான இளங்கலை
படிப்பான எல்.எல்.பி
மற்றும் முதுகலை படிப்பான
எல்.எல்.எம்
படிப்புக்கான அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது. இந்த
படிப்புகளில் சேர
விருப்பமுள்ள மாணவர்கள்
கல்வித்தகுதியாக இளங்கலை
படிப்புகளுக்கு 12 ஆம்
வகுப்பில் 45 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
முதுகலை
படிப்பான எல்.எல்.எம்
படிப்பில் சேர, இளங்கலை
எல்.எல்.பி.,
அல்லது பி.எல்
படிப்புகள் படித்திருக்க வேண்டும்.
மேலும் அதில் 55 சதவிகிதம்
தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இந்த நுழைவுத் தேர்வு
எழுத அதிகபட்ச வயது
வரம்பு ஏதுமில்லை. இந்த
படிப்புகளில் சேர
SC/ST மாணவர்களுக்கு மதிப்பெண்களில் 5 சதவிகித சலுகை வழங்கப்படும்.
இந்த
நுழைவுத் தேர்வுகளில் ஆங்கில
அறிவு, பொது அறிவு,
கணிதம், லீகல் ஆப்டிடியூட் மற்றும் லாஜிக்கல் ரீசனிங்
போன்றவற்றில் இருந்து
கேள்விகள் கேட்கப்படும். CLAT-UG தேர்வில்
மொத்தம் 150 ஆப்ஜெக்டிவ் டைப்
கேள்விகளும், CLAT-PG தேர்வில்
மொத்தம் 100 ஆப்ஜெக்டிவ் டைப்
கேள்விகளும் கேட்கப்படும். இந்த
தேர்வுக்கான விண்ணப்பங்கள் அனுப்ப
ஏப்ரல் 30 ஆம் தேதி
கடைசி நாள் ஆகும்.
கூடுதல்
விவரங்கள் பற்றி அறிய
https://consortiumofnlus.ac.in/ இணையதளத்தை பார்க்கலாம். இந்த தேர்வுகள்
ஜூன் மாதம் 13 ஆம்
தேதி நடைபெற உள்ளது.