தமிழக தேர்தல்
பணியாளர்களுக்கான மதிப்பூதிய அட்டவணை வெளியீடு
தமிழகம்
உட்பட ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடத்த
தேர்தல் ஆணையம் திட்டமிட்டு உள்ளது. அதில் தமிழகம்
மற்றும் புதுச்சேரியில் ஒரே
நாளில் (ஏப்ரல் 6) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இம்முறை
கொரோனா தொற்று அச்சம்
காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு 1 மணிநேரம்
அதிகரிப்பு, வாக்காளர்களுக்கு கையுறை
வழங்குதல், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களும் வாக்களிக்கும் வசதி
உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
இதற்கான
வேட்மனு தாக்கல், தேர்தல்
அறிக்கை, பிரச்சார பொதுக்கூட்டங்கள், பரப்புரை என
தமிழக அரசியல் களமே
சூடுபிடிக்கத் தொடங்கி
உள்ளது. இறுதி வேட்பாளர்
பட்டியலும் சில நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது. இந்நிலையில் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ள அரசு ஊழியர்கள்
மற்றும் ஆசிரியர்களுக்கான 4 கட்ட
பயிற்சி வகுப்புகள் ஏற்கனவே
தொடங்கி தற்போது நடைபெற்று
வருகிறது. இந்த பணிகளுக்காக மதிப்பூதியம் வழங்கப்படுகிறது.
தேர்தல்
பணிகளில் ஈடுபடும் வாக்குச்சாவடி அலுவலர்கள், தன்னார்வ பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு பயிற்சி
நாள்கள், தேர்தலுக்கு முந்தைய
நாள், தேர்தல் நாள்
பணி மற்றும் உணவுக்காக
தேர்தல் ஆணையம் வழங்கும்
மதிப்பூதியம் உள்ளிட்ட
முழு விபரங்களும் தற்போது
வெளியாகி உள்ளது.
அட்டவணை: Click
Here