நாட்டா நுழைவுத்தேர்வில் புதிய தளர்வுகள்
– AICTE
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஆர்க்கிடெக்ட் என்னும்
கட்டடவியல் படிப்புகளில் மாணவர்
சேர்க்கைக்கு நேஷனல்
ஆப்டிடியூட் டெஸ்ட் இன்
ஆர்கிடெக்சர் (NATA) என்னும்
நுழைவுத் தேர்வை எழுத
வேண்டும். ‘கவுன்சில் ஆப்
ஆர்க்கிடெக்சர்’ வாரியம்
பி.ஆர்க்., படிப்புக்கான நுழைவுத் தேர்வை நடத்துகிறது. படிப்பை முடித்த மாணவர்கள்
‘கவுன்சில் ஆப் ஆர்க்கிடெக்சர்’ வாரியத்தில் தங்களை பதிவு
செய்தால் மட்டுமே ‘ஆர்க்கிடெக்ட்’ ஆக பணிபுரிய முடியும்.
நடப்பு
ஆண்டில் நாட்டா நுழைவு
தேர்வுகள் ஏப்ரல் 10ம்
தேதி மற்றும் ஜூன்
12ம் தேதிகளில் நடக்க
உள்ளது. முன்னதாக இதற்கான
தகுதியாக 12ம் வகுப்பில்
இயற்பியல், வேதியியல், கணிதம்
பாடங்களில் 50% மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும் அல்லது 10ம்
வகுப்பிற்கு பின்னர் 3 ஆண்டுகள்
டிப்ளமோ படிப்பில் குறைந்தபட்ச மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும்.
CORONA நோய்த்தொற்று காரணமாக கல்வி நிறுவனங்கள் சரிவர செயல்பட முடியாத
காரணத்தால் அகில் இந்திய
தொழில்நுட்ப கல்வி குழுமம்
தேர்வுக்கான மதிப்பெண்களில் மாற்றம்
செய்ய முடிவு செய்துள்ளது. அதன்படி, 2021 – 2022ம்
கல்வி ஆண்டுக்கான JEE
அடிப்படையில் பி.ஆர்க்
சேர்க்கைக்கு பிளஸ்
2-ல் இயற்பியல், வேதியியல்,
கணித பாடத்துடன் தேர்ச்சி
பெற்றிருந்தாலே போதுமானது
என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டா
தேர்வு குறித்த அதிக
தகவல்களை http://www.nata.in/
என்ற இணையதளத்தில் அறிந்து
கொள்ளலாம்.