சமையல் எரிவாயு
சிலிண்டர் விலை 10 ரூபாய்
குறைப்பு – இந்தியன் ஆயில்
கொரோனா
பரவல் காரணமாக விலைவாசி
தொடர்ந்து உயர்ந்து கொண்டே
வந்தது. பெட்ரோல், டீசல்
மற்றும் சமையல் எரிவாயு
சிலிண்டர் விலை தொடர்ந்து
மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.
எண்ணெய் நிறுவனங்கள் மாதத்திற்கு இரண்டு முறை காஸ்
சிலிண்டர் விலையை நிர்ணயம்
செய்து வருகின்றன. அதன்படி
கடந்த பிப்ரவரி மாதத்தில்
மட்டும் 100 ரூபாய் விலை
உயர்த்தப்பட்டது. இதனால்
பொதுமக்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.
சர்வதேச
சந்தையின் கச்சா எண்ணெய்
விலை, இறக்குமதி செலவு,
அமெரிக்க டாலருக்கு நிகரான
இந்திய ரூபாயின் மதிப்பு
ஆகியவற்றின் அடிப்படையில் LPG சிலிண்டர்
விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. தற்போது இந்தியன் ஆயில்
நிறுவனம் விலை குறைப்பினை அறிவித்துள்ளது. அதன்படி
சமையல் எரிவாயு சிலிண்டர்
விலை 10 ரூபாய் குறைக்கப்பட்டு உள்ளது.
விலை
குறைவு ஏப்ரல் 1ம்
தேதி முதல் அமலுக்கு
வரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன்
மூலம் டெல்லியில் இன்று
நள்ளிரவு முதல் சமையல்
எரிவாயு சிலிண்டர் ஒன்றின்
விலை 819 ரூபாயில் இருந்து
809 ஆக குறைக்கப்பட்டு உள்ளது.