தமிழகத்தில் பள்ளி
மாணவர்களுக்கு இலவச
Bus pass
தமிழகத்தில் உள்ள அரசு, அரசு
உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தொலைதூரங்களில் இருந்து பள்ளிக்கு வந்து
செல்ல அரசு சார்பில்
இலவச பஸ் பாஸ்
வழங்கப்படுகிறது. இந்த
திட்டத்தை 2016 ஆம் ஆண்டு
அன்றைய முதல்வர் ஜெயலலிதா
அறிமுகப்படுத்தினார். இந்த
திட்டம் மூலமாக கிராமப்புறங்களில் உள்ள மாணவர்கள்
பெரிதும் பயனடைந்தனர்.
இந்நிலையில் கடந்த கல்வி ஆண்டில்
கொரோனா காரணமாக பள்ளிகள்
திறக்கப்படவில்லை. அதனால்
புதிய Bus
pass
வழங்கப்படவில்லை. அதன்
பின்னர் 9, 10, 11, 12 ஆம்
வகுப்பு மாணவர்களுக்கு மட்டும்
பள்ளிகள் திறக்கப்பட்டன. அவர்களுக்கு பழைய பஸ் பாஸ்
மூலமே பயணம் செய்யலாம்
என உத்தரவிடப்பட்டது. தற்போது
2021-2022 ஆம் கல்வி ஆண்டிற்கான பஸ் பாஸ் குறித்த
அறிவிப்பை தமிழக போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி
2021-2022 ஆம் ஆண்டிற்கான Bus pass வழங்க ஏற்பாடுகளை பள்ளிகள்
விரைவாக முடிக்க வேண்டும்
என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இலவச
பஸ் பாஸ் பெற
உள்ள மாணவர்களின் பெயர்,
புகைப்படம் உள்ளிட்ட விபரங்களை
உடனே சம்பந்தப்பட்ட போக்குவரத்து கழக நிர்வாகிகளுக்கு பள்ளிகள்
விரைந்து அனுப்ப வேண்டும்
என அறிவுறுத்தப்பட்டுள்ளது.