தமிழகத்தில் வாக்குப்பதிவின் போது செல்போன் கொண்டு
செல்ல தடை
தமிழகத்தில் இன்று 06-04-2021 சட்டமன்ற
தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று
கொண்டிருக்கிறது. தேர்தலில்
முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதியாக இலவச கார்
சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வாக்குப்
பதிவு நாளன்று முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு
உதவ இலவச வாகன வசதி: Click
Here
முன்னதாக
வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து வாக்களிக்க வேண்டும் என
தமிழக சுகாதாரத்துறை செயலர்
அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில் வாக்குச்சாவடிக்குள் பொதுமக்கள் செல்போன் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை
தேர்தல் அதிகாரி சத்யபிரத
சாகு தெரிவித்துள்ளார்.
இது
குறித்து அவர் அளித்துள்ள பேட்டி
ஒன்றில்:
ஓட்டுப்பதிவை கண்காணிக்கும் கட்டுப்பாட்டு அறை தலைமை செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி
வெப்கேமரா பொருத்தப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளிலும் கட்டுப்பாட்டு அறை
ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதற்காக
தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். வாக்குச்சாவடிகளில் ஓட்டளிக்க
செல்லும் போது செல்போன்களை கொண்டு செல்ல கூடாது.