NEST நுழைவுத்
தேர்வு நுழைவுச்சீட்டு – மே
20ம் தேதி வெளியீடு
ஒவ்வொரு
ஆண்டும் தேசிய அறிவியல்
கல்வி மற்றும் ஆராய்ச்சி
நிறுவனம் மற்றும் மும்பை
பல்கலைக்கழகத்தில் உள்ள
அணுசக்தி அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை
என்இஎஸ்டி நுழைவுத் தேர்வுகள்
மூலமாக நடைபெறுகிறது. 2021-2022 ஆம்
ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை
வழங்க விண்ணப்ப பதிவு
கடந்த மாதம் முதல்
தொடங்கப்பட்டது.
இதற்கான
விண்ணப்பங்கள் https://www.nestexam.in/ என்ற
இணையதளம் மூலமாக பதிவேற்றம் செய்யப்பட்டது. விருப்பமுள்ள மாணவர்கள் இந்த விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கான கடைசி
தேதி ஏப்ரல் 30 ஆம்
தேதி ஆகும். இந்த
தேர்வுகள் ஜூன் மாதம்
14 ஆம் தேதி நடைபெறும்
என அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தேர்வுகள் தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட
90 நகரங்களில் நடைபெற உள்ளது.
இந்த தேர்வுகளுக்கான ஹால்
டிக்கெட் மே மாதம்
20 ஆம் தேதி வெளியிடப்படும். தேர்வு எழுத விருப்பமுள்ள மாணவர்கள் மே 20 முதல்
இந்த தேர்வுக்கான ஹால்
டிக்கெட்களை பதிவிறக்கம் செய்து
கொள்ளலாம்.