HomeBlogசுங்கச்சாவடிகளில் அதிக கட்டணம் வசூலிக்க கூடாது – உயர்நீதிமன்றம் உத்தரவு

சுங்கச்சாவடிகளில் அதிக கட்டணம் வசூலிக்க கூடாது – உயர்நீதிமன்றம் உத்தரவு

 

சுங்கச்சாவடிகளில் அதிக
கட்டணம் வசூலிக்க கூடாது
உயர்நீதிமன்றம் உத்தரவு

நாடு
முழுவதும் கடந்த february மாதம் முதல் சுங்கச்சாவடிகளில் பாஸ்டாக் முறை
கட்டாயமாக்கப்பட்டது. இதனால்
வாகன ஓட்டிகளுக்கும் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே
சில்லறை பிரச்சனைகள், சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்துவதற்காக வாகன ஓட்டிகள் நெடு
நேரம் காத்திருப்பு போன்றவற்றை தடுக்கலாம் என்று கூறி
இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது.

பின்பு
கடந்த ஏப்ரல் மாதம்
1
ம் தேதி முதல்
தமிழகத்தில் சென்னை, மதுரை
உட்பட 26 சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை
ரூ.5 முதல் ரூ.30
வரை உயர்த்தினர். இதனால்
வாகன ஓட்டிகள் அனைவரும்
திணறி வந்தனர். இந்நிலையில் சென்னை திருச்சி தேசிய
நெடுஞ்சாலையில் பரனூர்
மற்றும் ஆத்தூர் பகுதி
சுங்கசாவடியின் கால
அவகாசம் கடந்த 2019ம்
ஆண்டு முதல் நிறைவு
பெற்றது. ஆனால் தற்போது
வரை அந்த பகுதி
சுங்கச்சாவடிகளில் கட்டணம்
வசூலிக்கப்பட்டு வருகிறது.

இதனை
தடை செய்ய வேண்டும்
என்று கூறி சென்னை
உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று
விசாரணைக்கு வந்தது. இதனை
விசாரித்த நீதிபதி, சுங்கச்சாவடிகளில் வசூல் செய்யப்படும் கட்டணம் நியாயமாக இருப்பதாக
தெரியவில்லை. தேசிய அளவில்
ஒரே மாதிரியான கட்டணம்
விதிக்கப்பட வேண்டும். மேலும்
அதிக கட்டணத்தை வசூலிக்கக்கூடாது என்று தேசிய
நெடுஞ்சாலை ஆணையத்திற்கு வலியுறுத்தி நீதிமன்றம் இந்த வழக்கை
இரண்டு வாரங்களுக்கு தள்ளி
வைத்தது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular