தமிழகத்தில் கொரோனாவால் ஆண்கள் தான் அதிகம்
பாதிப்பு – ஆய்வில் தகவல்
நாடு
முழுவதும் CORONA இரண்டாம்
அலை தாக்கம் வேகமாக
பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் கடந்த 24 மணி
நேரத்தில் 1,25,000 பேர்
பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மட்டும் கொரோனாவால் 3986 பேர்
பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகமாக
சென்னையில் மட்டும் 1,459 பேர்
பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை
சென்னையில் 2,57,851 பேர்
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில்
2,42,880 பேர் குணமடைந்துள்ளனர். 10,685 பேர்
அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை
பெற்று வருகின்றனர். 4,286 பேர்
இதுவரை உயிரிழந்துள்ளனர். அவர்களில்
30 முதல் 39 வயதினர் அதிகாமாக
பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 40 முதல்
49 வயதினர் 18.37 சதவீதமும், 50 முதல்
59 வயதினர் 17.97 சதவீதமும், 20 முதல்
29 வயதினர் 17.93 சதவீதமும், 60 முதல்
69 வயதினர் 11.13 சதவீதமும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
அதில்
குறைந்தபட்ச குழந்தைகள் 9 வயதுக்கு
உட்பட்டவர்களில் 1.60 சதவீதம்
பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களில் ஆண்கள்
59.71 சதவீதமும், பெண்கள் 40.29 சதவீதம்
பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதன்படி
ஆண்கள் தான் கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என
தெரிவிக்கப்பட்டுள்ளனர்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


