CORONA.வை
கட்டுப்படுத்த “NO MASK, NO
SERVICE” திட்டம் – மத்திய அரசு
அறிவுறுத்தல்
நாடு
முழுவதும் CORONA
இரண்டாம் அலை தாக்கம்
அதிகாமாக பரவி வருகிறது.
இதன் காரணமாக பல
மாநிலங்களில் கொரோனா
கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தடுப்பு
நடவடிக்கையாக அனைத்து
மாநில முதல்வர்களுடன் பாரத
பிரதமர் இன்று மாலை
காணொளி காட்சி மூலமாக
ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்நிலையில் CORONA.வை கட்டுப்படுத்த மத்திய அரசு சில
அறிவுறுத்தல்களை மாநில
அரசிற்கு வழங்கியுள்ளது. அதில்
புதிதாக “NO
MASK, NO SERVICE” திட்டத்தை அமல்படுத்த அனைத்து
மாநில அரசுகளுக்கும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. இந்த
திட்டத்தின் படி மக்கள்
அதிகம் கூடும் பெட்ரோல்
பங்க்குகள், வணிக வளாகங்கள்,
சூப்பர் மார்க்கெட்டுகள், எரிவாய்வு
வாங்கும் இடங்களில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அந்த
இடங்களில் முகக்கவசம் அணிந்து
வராதவர்களுக்கு பொருட்கள்
விற்பனை செய்யக் கூடாது
என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும்
கொரோனா தடுப்பூசி பணி
நடைபெற்று வந்தாலும் மக்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வு இருந்தால் மட்டுமே கட்டுப்படுத்த வேண்டும். எனவே மத்திய
சுகாதாரத்துறை இந்த
திட்டத்தை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.