தமிழகத்தில் மினி
ஊரடங்கு – ஏப்ரல் 10 முதல்
புதிய கட்டுப்பாடுகள் அமல்
தமிழகத்தில் CORONA இரண்டாம் அலை
தாக்கம் காரணமாக ஏப்ரல்
10ஆம் தேதி முதல்
புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ளதாக அரசு அறிவிப்பு
வெளியிட்டுள்ளது.
புதிய
கட்டுப்பாடுகள்:
- தமிழகத்தில் CORONA இரண்டாம் அலை தாக்கம்
அதிகாமாக பரவி வருகிறது.
இந்நிலையில் CORONA.வை
கட்டுப்படுத்த பல்வேறு
வழிகாட்டு நெறிமுறைகளை அரசு
தெரிவித்துள்ளது. மேலும்
மாவட்ட அளவில் ஆட்சியர்கள் முகக்கவசம் அணிதல், சமூக
இடைவெளி போன்ற கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. மேலும்
அதனை கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம்
விதிக்கப்பட்டது. - இந்நிலையில் CORONA.வை கட்டுப்படுத்த தமிழக
அரசு தற்போது புதிய
அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில்
முக்கியமாக திருவிழா, வழிபாட்டு
தலங்களுக்கு அனுமதி இல்லை
உள்ளிட்ட கட்டுப்பாடுகள் வெளியிடப்பட்டுள்ளன.
கட்டுப்பாடுகள் பின்வருமாறு,
- வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வரும்
பயணிகளுக்கு இ–பாஸ்
முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. - தமிழகத்தில் உள்ள
அனைத்து திருவிழா, வழிபாட்டு
தலங்களில் மத கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும்
இரவு 8 மணி வரை
மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. - பெரிய வணிக
வளாகங்கள், பெரிய கடைகளில்
50% வாடிக்கையாளர்கள் மட்டுமே
அனுமதிக்கப்படுவார்கள். - தமிழகத்தில் கோயம்பேடு
உள்ளிட்ட பெரிய சந்தைகளில் சில்லறை வியாபாரிகள் ஏப்ரல்
10ஆம் தேதிக்கு பின்னர்
செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. - திருமண விழாக்களில் 100 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
- அரசியல் கல்வி,
சமுதாய நிகழ்ச்சிகளுக்கு 200 பேர்
மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். - நோய்கட்டுப்பாடு பகுதிகளில் எந்தவித தளர்வுகள் இன்றி
ஊரடங்கு அமல்படுத்தப்படும். - தியேட்டர்களில் 50 சதவிகித
இருக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்படும். - பேருந்துகளில் நின்றுகொண்டு பயணம் செய்ய அனுமதியில்லை.
- ஆட்டோக்களில் ஓட்டுநர்
உள்ளிட்ட 3 பேர் மட்டுமே
அனுமதிக்கப்படுவார்கள். - கேளிக்கை விடுதிகளில் 50% வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே
அனுமதி. - பொழுதுபோக்கு பூங்கா,
உயிரியல் பூங்கா, அருங்காட்சியம் உள்ளிட்டவைகளுக்கு 50% வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதி. - அனைத்து வழிபாட்டு
தலங்களிலும் மதம் சார்ந்த
கூட்டம், திருவிழா நடத்துவதற்கு அனுமதி இல்லை. - தமிழகத்தில் அனைத்து
வழிபாட்டு தலங்களிலும் இரவு
8 மணி வரை அனுமதி. - பார்வையாளர்கள் இன்றி
விளையாட்டு போட்டிகளை நடத்த
அனுமதி. - ஹோட்டல், டீ
கடைகளில் இரவு 11 மணி
வரை 50 சதவிகித வாடிக்கையாளர்களுடன் இயங்க அனுமதி.