முதல் பட்டதாரிகளுக்கு உதவித்தொகை வழங்கவில்லை – மாணவர்கள்
தவிப்பு
ஆண்டுதோறும் குடும்பத்தில் முதல்
பட்டதாரியாக வரும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால் 2020ஆம் ஆண்டிற்கான உதவித்தொகை இன்னும் வழங்கவில்லை என்றும் அதனை வழங்குமாறு மாணவர்கள் கோரிக்கை விடுத்தது
வருகின்றனர்.
சுமார்
கடந்த 10 ஆண்டு காலமாக
மாணவர்கள் தொழில் கல்வி
மற்றும் மருத்துவ படிப்பு
பயிலும் குடும்பத்தின் முதல்
பட்டதாரி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு
உதவித்தொகை வழங்கி வருகிறது.
இதனால் குடும்பத்தில் பெற்றோர்கள் பயிலாமல் இருந்தாலும் அவர்களது
பிள்ளைகள் பொருளாதார சிரமமின்றி பயின்று வருவார்கள். மருத்துவ
படிப்பு பயிலும் மாணவர்களுக்கு ஓர் ஆண்டிற்கு 1 லட்சத்து
25 ஆயிரம் ரூபாய் வழங்கி
வருகின்றனர்.
ஆனால்
கடந்த ஆண்டு நாடு
முழுவதும் CORONA நோய்த்தொற்று பரவியது. குறிப்பாக தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா
வேகமாக பரவி வந்தது.
இதனால் பல்வேறு துறைகள்
நடைபெறுவதில் சிக்கல்
எழுந்தது. இதனால் தமிழகத்தில் நிதிப்பற்றாக்குறை பிரச்சனைகள் ஏற்பட்டது. இதனை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு
பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வந்தது. இந்நிலையில் 2020ம் ஆண்டிற்கான முதல்
பட்டதாரிகளுக்கான உதவித்தொகை வழங்கப்படவில்லை.
தற்போது இதுகுறித்து அன்னூர் பகுதியை சேர்ந்த மருத்துவ பட்டப்படிப்பு மாணவ
மாணவிகள் கூறுகையில்:
மருத்துவப்படிப்பில் சேர்ந்து முதல்
பட்டதாரிக்கு வழங்கப்படும் உதவித்தொகை முதல் ஆண்டு
படிப்பிற்கு பெற்றோம். ஆனால்
கடந்த ஆண்டு அதற்கான
உதவித்தொகை வழங்கவில்லை. கல்வி
ஆண்டு முடிந்தும் இன்னும்
உதவித்தொகை அரசு வழங்கவில்லை. ஆனால் கல்லூரிகளில் கட்டணம்
செலுத்த தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். இதனால் வட்டிக்கு
கடன் வாங்கும் நிலை
ஏற்படுகிறது. எனவே அரசு
முதல் பட்டதாரிகளுக்கு உதவித்தொகை விரைவில் வழங்கும் படி
கோரிக்கை விடுத்துள்ளனர்.