HomeBlogஅடுத்த 4 ஆண்டுகளில் 7 லட்சம் வேலைவாய்ப்புகள் – அமேசான் நிறுவனம் அறிவிப்பு

அடுத்த 4 ஆண்டுகளில் 7 லட்சம் வேலைவாய்ப்புகள் – அமேசான் நிறுவனம் அறிவிப்பு

 

அடுத்த 4 ஆண்டுகளில் 7 லட்சம் வேலைவாய்ப்புகள்அமேசான்
நிறுவனம் அறிவிப்பு

நாடு
முழுவதும் 2020ஆம் ஆண்டில்
அமேசான் நிறுவனர் ஜெஃப்
பெசோஸ் பல்வேறு இலக்குகளை
நிர்ணயித்தார். அதில்
குறிப்பாக 2025 ஆம் ஆண்டிற்குள் அமேசானின் ஏற்றுமதி மதிப்பு
74
ஆயிரம் கோடி ரூபாயை
எட்டும் என அவர்
தெரிவித்தார். மேலும்
பலருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட
உள்ளதாக அவர் தெரிவித்தார். அதன்படி 2020 ஆம் ஆண்டில்
3
லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும்
2025
ஆம் ஆண்டிற்குள் 7 லட்சம்
பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட
உள்ளதாக இலக்கு நிர்ணயித்துள்ளார். கடந்த ஆண்டில்
அமேசான் நிறுவனம் இந்தியாவில் இருந்து 22 ஆயிரம் கோடி
ரூபாய்க்கு ஏற்றுமதி செய்து
சாதனை படைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. ஒரு கோடி முதலீடு
உள்ள சிறு, குறு,
நடுத்தர நிறுவனங்கள் டிஜிட்டல்
மயமாக்கப்படும் என்ற
இலக்கில் 25 லட்சம் என்ற
மைல்கல்லை அந்த நிறுவனம்
எட்டியுள்ளது.

இதற்கு
CORONA ஊரடங்கு காலத்தில்
மக்கள் ஆன்லைன் மூலமாக
பொருட்களை வாங்குவது அதிகமானதே
காரணம் என்று அவர்கள்
தெரிவிக்கின்றனர். மேலும்
கடந்த ஆண்டில் சிறு
நகரங்களை சேர்ந்த 85 சதவீத
வாடிக்கையாளர்கள், அமேசான்
நிறுவனம் மூலமாக 55 சதவீத
ஆர்டர்களை கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா
இரண்டாம் அலை தாக்கம்
வேகமாக பரவி வருவதால்
அவர்களது இலக்கு மேலும்
உயர வாய்ப்புள்ளதாக அவர்
தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular