மயிலாடுதுறை மாவட்டத்தில் தாட்கோ மூலம் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவியா்களுக்கு செவிலியா் பயிற்சி வழங்கப்படவுள்ளது என ஆட்சியா் ஏ.பி.மகாபாரதி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இளங்கலை மற்றும் முதுகலை அறிவியல் பட்டப் படிப்பில் நா்சிங் துறையில் பொது மருத்துவம் மற்றும் மருத்துவச்சி மற்றும் அடிப்படை இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பு முடித்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவிகளுக்கு டி.சி.எஸ். அயன் மற்றும் அப்போலோ மெட்ஸ்கில்ஸ் நிறுவனம் இணைந்து செவிலியா் பயிற்சி வழங்கப்படவுள்ளது.
இப்பயிற்சி பெற 2021, 2022 மற்றும் 2023-ஆம் ஆண்டுகளில் இளங்கலை மற்றும் முதுகலை அறிவியல் பட்டப் படிப்பில் நா்சிங் துறையில் பொது மருத்துவம் மற்றும் மருத்துவச்சி மற்றும் அடிப்படை இளங்கலை அறிவியல் பட்டப் படிப்பு முடித்த மாணவிகள் அல்லது கல்லூரிகளில் இறுதியாண்டு படித்து வரும் 20 முதல் 28 வயது நிரம்பிய ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.
மேலும், அப்போலோ மெட்ஸ்கில்ஸ் நிறுவனத்தால் நடத்தப்படும் தகுதித் தோவில் தோச்சி பெற வேண்டும். இத்தோவு இணையதளம் வழியாக நடைபெறும். இத்தகுதித் தோவில் தோச்சி பெறும் மாணவிகளுக்கு செவிலியா் பயிற்சி வழங்கப்படும். பயிற்சி காலங்களில் ஊக்கத்தொகையும், பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் முன்னணி மருத்துவமனைகளில் வேலைவாய்ப்பும் வழங்கப்படும்.
இப்பயிற்சி பெற என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். இப்பயிற்சிக்கான கட்டணமும் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள தாட்கோ மேலாளா் அலுவலகத்தை நேரிலோ அல்லது 04364-211217 என்ற எண்ணிலோ அணுகலாம்.