Wednesday, August 13, 2025
HomeBlogTNPSC தேர்வுகளில் புதிய மாற்றங்கள் அறிவிப்பு – ஜூன் முதல் அமல்

TNPSC தேர்வுகளில் புதிய மாற்றங்கள் அறிவிப்பு – ஜூன் முதல் அமல்

TNPSC தேர்வுகளில் புதிய
மாற்றங்கள் அறிவிப்புஜூன்
முதல் அமல்

தமிழ்நாடு
அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் அரசு பணிகளுக்கான துறை ரீதியாக நடத்தப்படும் தேர்வுகள் வருடத்திற்கு இரண்டு
முறை நடத்தப்படுகின்றன. இந்த
தேர்வுகளை சீரமைக்கும் பொருட்டு
TNPSC
சில மாற்றங்களை அறிவித்துள்ளது.

அதன்படி
ஜூன் 2021.ல் நடத்தப்பட
உள்ள துறை தேர்வுகளில் கணினி வழியாக நடத்தப்பட்டும் தேர்வினை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும்
பாடத்திட்டங்களில் புதிய
திருத்தங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பை
பல்வேறு துறைகளிடமிருந்து பெறப்பட்ட
கருத்துக்களின் அடிப்படையில் திருத்தியமைக்கப்பட்ட பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறை
தேர்வாணைய இணையதளம் www.tnpsc.gov.in ல்
பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

கணினி
வழி தேர்வினை அறிமுகப்படுத்துவதற்கிணங்க பின்வரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன:

கொள்குறிவகை தேர்வுகளுக்கான துறைத் தேர்வுகள் கணினி
வழித் தேர்வாக நடைபெறும்.

விரிந்துரைக்கும் வகையிலான
துறைத் தேர்வுகளைப் பொருத்தமட்டில் தற்போதுள்ள நடைமுறையான எழுத்துத்
தேர்வு (Manual Writen Examination) வகையிலேயே
தொடரும். கொள்குறிவகை மற்றும்
விரிந்துரைக்கும் வகை
எழுத்துத் தேர்வுகளை கட்டாயமாக
ஒருங்கிணைத்து எழுத
வேண்டிய துறைத்தேர்வுகளை பொருத்தமட்டில் தேர்வர்கள் கொள்குறிவகையிலான கணினி
வழித்தேர்வு மற்றும் விரிந்துரைக்கும் வகை எழுத்துத்
தேர்வுகளுக்கு தனித்தனியே தேர்வெழுத வேண்டும்.

மேற்கூறிய பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறை
நடைபெறவிருக்கும் துறைத்தேர்வுகளிலிருந்து உத்தேசமாக பின்வருமாறு நடத்தப்படவுள்ளது.

கணினி
வழி தேர்வுகள் 22.06.2021லிருந்து
26.06.2021
வரை நடைபெறும் விரிந்துரைக்கும் வகை எழுத்துத்
தேர்வுகள் 27.06.2021லிருந்து
நடைபெறும்.

கொள்குறிவகை மற்றும் விரிந்துரைக்கும் வகை
எழுத்துத் தேர்வுகளை ஒருங்கிணைத்து எழுதவிருக்கும் தேர்வர்கள் கொள்குறிவகையிலான கணினி
வழித்தேர்வு மற்றும் விரிந்துரைக்கும் வகை எழுத்துத்
தேர்வுகள் அவற்றிற்கென ஒதுக்கப்பட்ட இரு வேறு தினங்களில் தேர்வெழுத வேண்டும்.

நடைபெறவிருக்கும் துறைத்தேர்வினை எதிர்கொள்ளும் தேர்வர்கள் தேர்வாணைய இணையதளத்தினை தொடர்ந்து
கண்காணிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular