தமிழக அரசு
ஊழியர்களுக்கு ஊக்க
ஊதியம் உயர்வு
தமிழகத்தில் அரசு துறைகளில் பணிபுரிபவர்களுக்கு கணிசமான தொகை
ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது.
அரசு ஊழியர்களுக்கு ஊதியம்
மட்டுமல்லாது அதனுடன்
பல சலுகைகள் கிடைத்து
வருகிறது. அதனால் அரசாங்க
வேலைக்காக பலரும் போட்டி
போட்டு வருகின்றனர். அதே
சமயம் எந்தவொரு அரசு
துறைகளிலும் பணியில் இருக்கும்
ஊழியர்களுக்கு அவர்களது
உயர் கல்வியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.
அதாவது
உயர்கல்வியில் ஒரு
பட்டப்படிப்பை முடித்தவர்களுக்கு ஒரு ஊதியமும்,
அதே இரண்டு பட்டபடிப்புகளை முடித்தவர்களுக்கு அதிகமான
அளவு ஊதியமும் வழங்கப்பட்டு வந்தது. தமிழக அரசு
இந்த உயர்கல்வி ஊதிய
உயர்வை ரத்து செய்து
கடந்த ஆண்டு மார்ச்
மாதம் 10ஆம் தேதி
ஒரு அரசாணையை வெளியிட்டது. இந்த அரசாணைக்கு பலர்
தங்களது எதிர்ப்புகளை பதிவு
செய்து வந்தனர். இந்நிலையில் தமிழக அரசு அக்டோபர்
மாதம் 15 ஆம் தேதி
மீண்டுமாக ஒரு அரசாணையை
வெளியிட்டது.
அதில்:
கடந்த
வருடம் மார்ச் 10ஆம்
தேதிக்கு முன்னதாக உயர்கல்வி
படித்தவர்களின் தகுதியின்
அடிப்படையில் ஊக்க
ஊதிய உயர்வு வழங்கலாம்
என உத்தரவு அளித்தது.
இந்நிலையில் தமிழக அரசின்
பொதுப்பணித்துறையில் உயர்
கல்வி படித்துள்ளவர்களுக்கு அட்வான்ஸ்
ஊதிய உயர்வு வழங்க
உத்தரவிடப்பட்டுள்ளது. அதாவது
பொறியியல் துறையில் இளங்கலை
முடித்துள்ளவர்கள் பணியில்
இருந்து கொண்டே முதுகலை
படிப்புகளை முடிக்கின்றனர். அவ்வாறு
பயின்ற மாணவர்களுக்கு ஊக்க
உயர்வு ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


