TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
RTGS பரிவர்த்தனை ஏப்ரல் 18ல் செயல்படாது – Reserve Bank
கடந்த ஆண்டு முழுவதும் CORONA காலம் என்பதால் நாட்டில் பல மாற்றங்கள் ஏற்பட்டது. கொரோன நோய்த்தொற்று அச்சத்தினால் மக்கள் அனைவரும் நேரடி பணபரிவர்த்தனையை குறைத்தனர். இதனால் ஆன்லைன் மூலம் பணப்பரிவர்த்தனை நடப்பது தொடர்ந்து அதிகரித்து வந்தது. Gpay, PhonePe
போன்ற செயலிகளை பயன்படுத்தி மக்கள் அனைவரும் ஆன்லைன் பரிவர்த்தனையை மேற்கொண்டு வந்தனர். NEFT மூலம் வாடிக்கையாளர் 2 லட்ச ரூபாய் மட்டுமே பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும்.
2 லட்சத்திற்கு அதிகமான தொகையை அனுப்ப வேண்டும் என்றால் RTGS சேவையை பயன்படுத்த வேண்டும். தற்போது பயனாளர்களுக்கு பயன்படும் வகையில் RTGS 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. இந்நிலையில் வருகிற 18ம் தேதி அன்று சுமார் 14 மணி நேரம் RTGS சேவை செயல்படாது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. தற்போது இது குறித்து ரிசர்வ் வங்கி நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் கூறியிருந்ததாவது, ஏப்ரல் 18ம் தேதி தொழில்நுட்ப ரீதியில் மேம்பாட்டு பணிகள் நடைபெறவுள்ளது. எனவே ஞாயிற்று கிழமை நள்ளிரவு 12 மணி முதல் மறுநாள் பிற்பகல் 2 மணி வரை இந்த சேவை மூலம் பரிவர்த்தனை நடைபெறாது என்று தெரிவித்துள்ளது. ஆனால் NEFT முறையிலான பரிவர்த்தனை தொடர்ந்து நடைபெறும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. எனவே இதனை கருத்தில் கொண்டு விரைவாக பணபரிவர்த்தனையை மேற்கொள்ள வங்கி மூலம் திட்டமிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.