TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
LIC ஊழியர்களுக்கு 16% ஊதிய அதிகரிப்பு, வாரத்தில் 5 நாள் வேலை
2021 – 2022 புதிய நிதியாண்டில் இந்திய ஆயுள் காப்பீடு கழகம் தனது 1.14 லட்சம் ஊழியர்களுக்கான புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் மூலம் பணியாளர்களுக்கு அதிக லாபம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. LIC-ன் யூனியன் தலைவர் அவர்கள், 2017 ஜனவரி 1ம் தேதி முதல் LIC ஊழியர்களுக்கான ஊதியம் 16% ஆக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
LIC யின் மொத்த ஊதிய மசோதா ஆண்டுக்கு ரூ.2,700 கோடியாக உயரும் என்று LICயின் பொதுச்செயலாளர் மிஸ்ரா அவர்கள் அறிவித்துள்ளார்.
மேலும், கடுமையான பொருளாதார நெருக்கடியான நிலையில் ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளதால் ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அனைத்து ஊழியர்களுக்கும் அகவிலைப்படி சதவீதம் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. LIC.யின் ஒட்டுமொத்த மதிப்பு 9-10 லட்சம் கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மொத்த பிரீமியம் தொகை ரூ.45 லட்சம் கோடியுடன், மொத்தம் 28 கோடி நபர்களின் LIC பாலிசிகளை கொண்டுள்ளது.
சிறப்பம்சங்கள்:
- LIC ஊழியர்கள் 16% க்கும் அதிகமான ஊதிய உயர்வு.
- அனைத்து ஊழியர்களுக்கும் மாதத்திற்கு ரூ.1,500 முதல் ரூ.13,500 வரை சிறப்பு படி வழங்கப்படும்.
- அகவிலைப்படி 6,352 புள்ளிகளாக உள்ளது.
- LIC ஊழியர்களுக்கு வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே வேலை நாள்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram


