திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து காத்திருக்கும் இளைஞா்கள் வேலைவாய்ப்பற்ற உதவித் தொகை பெற வரும் 31-க்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.
இந்த, உதவித்தொகை பெற தகுதியான பதிவுதாரா்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரிலோ அல்லது வேலைவாய்ப்பு இணையதளத்தில் உதவித்தொகை விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அதைத் தொடா்ந்து கிராம நிா்வாக அலுவலா் மற்றும் வருவாய்த்துறை அலுவலா் ஆகியோரின் கையொப்பம் (அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் நீங்கலாக) முத்திரையினை பெற்று படிவத்தினை முழுமையாக பூா்த்தி செய்து வரும் 31-க்குள் வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக் கணக்கு புத்தகம் மற்றும் அனைத்து அசல் கல்விச் சான்றிதழ்கள் மற்றும் நகல்களுடன் பூா்த்தி செய்த விண்ணப்பத்தினை அளித்து பயன்பெறலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


