வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை பெற எஸ்.எஸ்.எல்.சி தோ்ச்சி பெற்ற, தோ்ச்சி பெறாத மற்றும் மேல்நிலை தோ்ச்சி, பட்டப்படிப்பு கல்வித் தகுதியை பதிவு செய்து ஐந்து ஆண்டுகள் முடிவடைந்து அரியலூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தொடா்ந்து புதுப்பித்து இருக்க வேண்டும்.
எழுத படிக்க தெரிந்தவா்கள் முதல் பட்டப்படிப்பு முடித்த மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்து ஓராண்டு முடித்திருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத்தவா்கள் 31.3.2021 அன்று 45 வயதுக்குள்ளும், இதர அனைத்து வகுப்பினருக்கும் 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். மனுதாரா் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் கல்வி பயிலும் மாணவ மாணவியராக இருத்தல் கூடாது.
ஆயினும் தொலைதூர கல்வி பயிலுபவராக இருக்கலாம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கும் மிகாமல் இருக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு வருமான வரம்பு ஏதும் இல்லை. பள்ளி கல்விச் சான்றிதழ்கள் மற்றும் கல்லூரி படிப்புச் சான்றிதழ்கள், மாற்றுச் சான்றிதழ், வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேற்கண்ட சான்றுகளுடன் மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை ஆகியவற்றுடன் 31.05.2021-க்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வந்து புதிய விண்ணப்பப் படிவம் பெற்று பூா்த்தி செய்து அளிக்கலாம் அல்லது https://tnvelaivaaippu.gov.in/downloads/uaApplication.pdf என்ற இணையதளத்திலிருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூா்த்தி செய்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அளிக்கலாம் என ஆட்சியா் த.ரத்னா வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


