Monday, August 11, 2025
HomeBlogமத்திய அரசின் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் குறுகிய கால தொழில் பயிற்சி

மத்திய அரசின் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் குறுகிய கால தொழில் பயிற்சி

மத்திய அரசின்
திறன் மேம்பாட்டுத் துறை
சார்பில் குறுகிய கால
தொழில் பயிற்சி

மத்திய
அரசின் திறன் மேம்பாட்டுத் துறையின் மூலம் கரோனா
தொடர்பான பணி பெற
குறுகிய கால பயிற்சி
வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது.

இதுதொடர்பாக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்:

மத்திய
அரசின் திறன் மேம்பாடு
மற்றும் தொழில் முனைவோர்
அமைச்சகத்தின் மூலம்
பிரதமரின் கவுசல் விகாஸ்
யோஜனா 3.0 என்ற பயிற்சி
திட்டத்தின் கீழ் தமிழ்நாடு
திறன் மேம்பாட்டு கழகத்தின்
சார்பில் சுகாதாரத்துறையில் கரோனா
தொடர்பாக இலவசமாக குறுகிய
கால பயிற்சி ஒரு
மாதம் அளிக்கப்பட உள்ளது.

இதில்
6
வகை பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. அவசர மருத்துவ
தொழில்நுட்ப வியலாளர், பொது
வேலை உதவியாளர், தீவிர
சிகிச்சைப் பிரிவு, வீட்டு
சுகாதார உதவியாளர், மருத்துவ
உபகரணங்கள் தொழில்நுட்ப உதவியாளர்
மற்றும் பிளேபோடோமிஸ்ட் ஆகிய
பணிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும். கருத்தியல் பாடத்திட்டம் உரிய
பயிற்சி மையத்திலும், செய்முறை
பயிற்சி அரசு மற்றும்
தனியார் மருத்துவமனை, சுகாதார
மையங்களில் வழங்கப்படும்.

இப்பயிற்சிகளில் 10-ம் வகுப்பு, பிளஸ்
2
மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் சேரலாம். விருப்பமுள்ளவர்கள் தங்களது
பெயர், கல்வித்தகுதி, பயிற்சியில் சேர விரும்பும் பிரிவு,
தொலைபேசி எண் மற்றும்
மெயில் முகவரி
ஆகியவற்றை http://bit.ly/3i3FQ7Z
என்ற இணைய முகவரியில் பதிவு செய்யலாம். மேலும்,
விவரங்களுக்கு 98430 22463, 73970
32681
ஆகிய செல்போன் எண்களில்
தொடர்பு கொள்ளலாம்.

சேலம்
மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இப்பயிற்சியில் சேர
பெயர், கல்வி தகுதி,
தொலைபேசி எண் மற்றும்
இமெயில் முகவரி ஆகியவற்றை
ricsalem7@gmail.com
என்ற
மின் அஞ்சலில் அனுப்பி
வைக்க வேண்டும். மேலும்
விவரங்களுக்கு 94422 08464, 98659
13900, 94990 55827, 94427 94071, 94430 15671
ஆகிய எண்களில்
தொடர்பு கொள்ளலாம்.

பயிற்சிக்கு விண்ணப்பிப்ப வர்கள்
தங்களது தகவல் களை
https://forms.gle/r2a4ib1vxHXTWacS6
என்ற இணைப்பினைப் பயன்படுத்தியும் பதிவேற்றம் செய்யலாம் என்று
சேலம் மாவட்ட ஆட்சியர்
கார்மேகம் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி, Tirupur மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் கல்வித்தகுதி மற்றும் சுயவிவரங்களை ஓசூர்
அரசினர் தொழிற்பயிற்சி மைய
வளாகத்தில் உள்ள மாவட்ட
திறன் பயிற்சி உதவி
இயக்குநரை அணுகியும் அல்லது
63836 43562, 70220 45795, 86101 50766, 81100 51765
ஆகிய
எண்களில் தொடர்பு கொண்டும்
தங்கள் பெயரை பதிவு
செய்து கொள்ளலாம். மேலும்,
பயிற்சியில் சேர விரும்பும் நபர்கள் https://forms.gle/JRNro3cep5WJ2Amc7
என்கிற இணையதளம் மூலமாக
படிவத்தை பூர்த்தி செய்து
சமர்ப்பிக்கலாம்.

பயிற்சிக்கு குறைந்தபட்சம் 18 வயது
பூர்த்தி செய்த ஆண்,
பெண் இருபாலரும் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments