TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
சிறந்த
பள்ளி ஆசிரியர்களை கௌரவிக்கும் விதமாக மத்திய அரசு
ஆண்டுதோறும் தேசிய நல்லாசிரியர் விருது வழங்குகிறது. அதற்காக
ஆசிரியர் பணியில் இருந்து
இந்த இந்திய நாட்டிற்கே குடியரசுத் தலைவராக உயர்ந்த
சர்வபள்ளி ராதா கிருஷ்ணன்
அவர்களின் பிறந்த நாளான
செப்டம்பர் 5ம் தேதி
தேசிய ஆசிரியர் தினமாக
கொண்டாடப்படுகிறது.
இந்த
விருதையும் அவரின் பெயரிலேயே
மத்திய அரசு வழங்குகிறது. இந்த விருது பெறும்
ஆசிரியர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாய், வெளிப்பதக்கம் மற்றும்
சான்றிதழ் ஆகியவை குடியரசு
தலைவரால் டெல்லியில் வழங்கப்படும். அரசு மற்றும் அரசு
மானியம் பெறும் பள்ளிகளில் பணிபுரிந்த தலைமை ஆசிரியர்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
ஜூன்
20ம் தேதி வரை
ஆசிரியர்கள் தேசிய விருதுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மத்திய
அரசு இதற்காக https://nationalawardstoteachers.education.gov.in/
என்ற இணையதள முகவரியை
வெளியிட்டுள்ளது.