கடந்த கல்வியாண்டில் மடிக்கணினி கிடைக்காத சுமார் 2 லட்சம் மாணவர்கள் மற்றும் இந்த கல்வி ஆண்டில் பயிலும் அனைவருக்கும் கைக்கணினி (TABLET) கொடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
அரசு பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு படிக்கும் ஒவ்வொரு மாணவருக்கும் அரசு சார்பில் மடிக்கணினி வழங்கும் திட்டம் ஆண்டு தோறும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த கல்வியாண்டில் மடிக்கணினி கொடுக்கப்படாத 2 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு இந்த கல்வியாண்டில் கைக்கணினி வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
அதாவது திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனைகளுக்கு கிவ் 2 ஏசியா தொண்டு நிறுவனம் மற்றும் கிராமாலயா ஆகியவை சார்பில் ஆக்சிஜன் செறிவூட்டிகள், குளிர்சாதன பெட்டி, ப்ரீஸர், டிஜிட்டல் வெப்பமானிகள், நீராவிக் கருவிகள், 1 லட்சம் கையுறைகள் உட்பட ரூ.73 லட்சம் மதிப்பிலான பொருட்களை தமிழக அரசுக்கு வழங்கும் நிகழ்ச்சி இன்று (ஜூன் 17) நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ‘கடந்த ஆண்டு ஆட்சியில் இருந்த அரசு சுமார் 2 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கவில்லை. அந்த மாணவர்களுக்கு திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி இந்த ஆண்டில் கைக்கணினி வழங்கப்படும். கொரோனா போன்ற பேரிடர் காலத்தில் ஆன்லைன் கல்வி பெருமளவு உதவுகிறது.
மேலும் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு, பள்ளிகளில் குறைந்தபட்சம் 25 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும். தனியார் பள்ளிகளுக்கு நிலுவை தொகை ஏதேனும் கொடுக்க வேண்டியது இருந்தால் அதை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் பள்ளிகளில் அனைத்து குழந்தைகளையும் ஒரே போல் நடத்த வேண்டும்’ என கூறியுள்ளார்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


