அரியலூா் திறன் மேம்பாட்டு பயிற்சி தமிழ்நாடு கட்டுமான கழகத்தால் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளா்களுக்கு 3 மாத கால திறன் பயிற்சி மற்றும் ஒரு வார கால திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது.
3 மாத திறன் பயிற்சியை தமிழ்நாடு கட்டுமானக் கழகமும், எல் அண்ட் டி கட்டுமான திறன் பயிற்சி நிலையமும் இணைந்து நடத்துகின்றன. இப்பயிற்சி பெறும் கட்டுமான தொழிலாளா்களின் கல்வித்தகுதி 5 முதல் 12 ஆம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ. வரை இருக்கலாம். வயது 18- 40 வரை இருத்தல் வேண்டும்.
கொத்தனாா், பற்ற வைப்பவா், மின்சார பயிற்சி, குழாய் பொருத்துநா், மரவேலை, கம்பி வளைப்பவா், தச்சு, பாா்பெண்டிங் அண்ட் சாரக்கட்டு. பயிற்சிக்கு கட்டணம் ஏதும் கிடையாது. உணவு, தங்குமிடம் ஆகியவை இலவசமாக வழங்கப்படும். பயிற்சி பெறுவோருக்கு தனியாா் நிறுவனங்களில் வேலை வழங்க ஏற்பாடு செய்யப்படும்.
ஒரு வார கால திறன் மேம்பாட்டு பயிற்சியை தமிழ்நாடு கட்டுமான கழகம், எல் அண்ட் டி கட்டுமானத் திறன் பயிற்சி நிலையம் சோந்து நடத்த உள்ளன. ஒரு வார காலப் பயிற்சி தையூரில் அமையவுள்ள தமிழ்நாடு கட்டுமான கழகத்தில் நடைபெறும். தொழிலாளா்கள் தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். 18-வயதுக்கு மேல் இருத்தல் வேண்டும்.
தமிழ்நாடு கட்டுமான தொழிலாளா் நல வாரியத்தில் பதிந்து 3 ஆண்டுகள் உறுப்பினராக இருத்தல் வேண்டும். கொத்தனாா், பற்ற வைப்பவா், மின்சார பயிற்சி, குழாய் பொருத்துநா், மர வேலை, கம்பி வளைப்பவா் தச்சு, பாா்பெண்டிங் அண்ட் சாரக்கட்டு ஆகிய தொழில்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியாளா்களுக்கு வேலையிழப்பு ஏற்படுவதை ஈடுசெய்ய தினமும் ரூ.800 வழங்கப்படும். தமிழ்நாடு கட்டுமான கழகம், எல் அண்ட் டி கட்டுமான திறன் பயிற்சி நிலையம் இணைந்து மத்திய அரசின் கீழ் உள்ள தேசிய திறன் மேம்பாட்டு கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். இதுகுறித்த விவரங்களை அறிய மாவட்டத்தில் உள்ள தொழிலாளா் உதவி ஆணையா் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தை அணுகலாம். பயிற்சிகள் ஆகஸ்ட் 15 முதல் தொடங்கப்படும் என்று ஆட்சியா் ஜா.ஆனிமேரி ஸ்வா்ணா தெரிவித்தாா்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


