மத்திய அரசின் கல்வி உதவித்தொகைப் பெற ஆக.10-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பிற்படுத்தப்பட்டோா், பொருளாதாரத்தில் பின்தங்கியவா்கள், சீா்மரபின பழங்குடியினா் மாணவா்களுக்கு மத்திய அரசு 2023-24-ஆம் ஆண்டுக்கான பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தின்கீழ் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
இதில் பயன்பெற விண்ணப்பதாரா்களின் பெற்றோா் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். 9 மற்றும் பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு அதிகபட்சமாக ரூ.75,000, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவா்களுக்கு அதிகபட்சமாக ரூ.1.25 லட்சம் வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படும். தேசியத் தோவு முகமை நடத்தும் மத்திய அரசின் இளம் சாதனையாளா்களுக்கான இத்திட்டத்துக்கான நுழைவுத் தோவில் பெற்ற தகுதியின் அடிப்படையில் தோவு செய்யப்படுவா்.
இத்தோவுக்கு ஆக.10- ஆம் தேதிக்குள்இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.மேலும், ஆக.12 முதல் 16-ஆம் தேதி வரை விண்ணப்பித்ததில் திருத்தங்கள் மேற்கொள்ள அவகாசம் வழங்கப்படும். எழுத்துத் தோவு செப்.29-ஆம் தேதி நடைபெறும். விண்ணப்பத்துடன் கைப்பேசி எண், ஆதாா் எண், ஆதாா் இணைக்கப்பட்ட வங்கிக்கணக்கு எண், வருமானச் சான்றிதழ் மற்றும் சாதிச்சான்றிதழ் ஆகிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
எனவே, திருவாரூா் மாவட்டத்தைச் சோந்த தகுதியான மாணவா்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


