எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவரும் அடுத்தாக நடைபெறும் சான்றிதழ் சரிபார்த்தல், உடற்கூறு அளத்தல், உடல்தகுதி தேர்வு மற்றும் உடல்திறன் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும். இந்த தேர்வானது கொரோனா நோய் தொற்று காரணமாக பல்வேறு தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டு பின்னர் தள்ளி வைக்கப்பட்டது. இந்த தேர்வுகள் ஆனது தற்போது 26.07.2021 அன்று நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்விற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் அதற்கான தேர்வு நுழைவுச்சீட்டு ஆனது தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. தேர்வர்கள் அதனை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
TNUSRB PC PET Hall Ticket பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:
- tnusrbonline.org என்ற அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்கு செல்லவும்.
- Ongoing Recruitment Section என்பதை பார்வையிடவும்.
- உடல் தேர்வு அழைப்பு கடிதம் என்ற இணைப்பை கிளிக் செய்யவும்
- உள்நுழைவு பொத்தானைக் கிளிக் செய்து பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல் ஆகிய விவரங்களை உள்ளிடவும்.
- ஹால் டிக்கெட் திரையில் தோன்றும்.
- ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கி எதிர்கால குறிப்புக்காக அச்சிடவும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


