அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது தற்போது பல்வேறு பணிகளுக்கான திருத்தப்பட்ட தேர்வு தேதிகள் அடங்கிய பட்டியலினை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் அது குறித்த முழு தகவல்களையும் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.
அரசு பணியாளர் தேர்வாணையம் – SSC ஆனது நாடு முழுவதும் உள்ள அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அவ்வப்போது பணியிட தேர்வினை நடத்தி வருகிறது. அதன்படி Sub-Inspector in Delhi Police, CAPFs and ASI in CISF, CGL, CHSL ஆகிய பணியிடங்களுக்கான அறிவிப்பினை முன்னதாக வெளியிட்டு இருந்தது.
இந்த சேவை பணிகளுக்கான தேர்வுகள் ஆனது முன்னதாகவே நடத்த இருப்பதாக திட்டமிட்டு இருந்தது. ஆனால் நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தொற்று அதிகமாக இருந்ததனால் இந்த தேர்வுகள் யாவும் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது விதிக்கப்பட்டு இருந்த ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டு வருவதனால், மீண்டுன்ம் இந்த தேர்வுகள் நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி Sub-Inspector in Delhi Police, CAPFs and ASI in CISF, CGL, CHSL ஆகிய பணியிடங்களுக்கான தேர்வுகள் தற்போது அரசின் கோவிட் கட்டுப்பாட்டு வழிமுறைகளின் படியில் கீழ்கண்ட தேதிகளில் நடைபெற உள்ளது. அது குறித்த மேலும் தகவல்களை கீழே உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் அறிந்து கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


