HomeBlogபோட்டித் தேர்வுகளுக்கு ஆன்லைனில் இலவச பயிற்சி

போட்டித் தேர்வுகளுக்கு ஆன்லைனில் இலவச பயிற்சி

💎 Join Our Premium Group – Download PDFs Directly 📚

TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place

TNPSC, வங்கி, காவல்துறை
போன்ற போட்டித் தேர்வுகளுக்கு ஆன்லைனில் இலவச பயிற்சி

TNPSC, வங்கி,
காவல்துறை போன்ற போட்டித்
தேர்வுகளுக்கு தயாராகும்
தேர்வர்களுக்காக, தமிழக
அரசு இணைய வழி
பயிற்சி வகுப்புகளை ஏற்பாடு
செய்துள்ளது.

தமிழகத்தில் படித்தவர்களில், பெரும்பாலானோரின் கனவு அரசு
வேலைக்குச் செல்வதுதான். அதனால்
போட்டி தேர்வுகளுக்கு தயாராகும்
தேர்வர்களுக்கு, தேர்வு
குறித்த சரியான பயிற்சிகளை அளிப்பதற்காக, தமிழக
அரசின் வேலைவாய்ப்புத்துறை மூலமாக
பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக
நேரடி வகுப்புகள் நடைபெற்று
வந்தது.

தற்போது,
கொரோனா தொற்று காரணமாக,
இணைய வழி பயிற்சி
வகுப்புகளை, வேலைவாய்ப்புத்துறை நடத்த
உள்ளது. இதில் தமிழ்நாடு
அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும், குரூப்
2
தேர்வுகளுக்கான பயிற்சி
வகுப்புகள் 05-07-2021 முதல்
இணையவழியில் நடத்தப்பட உள்ளது.
இந்த பயிற்சி வகுப்புகளில் சேர கட்டணம் ஏதுமில்லை.

வகுப்புகள் தினமும் காலை 10 மணி
முதல் மதியம் 12 மணி
வரையிலும், மாலை 2 மணி
முதல் 4 மணி வரையிலும்
நடத்தப்பட உள்ளன.

இந்த
பயிற்சி வகுப்புகளில் CISCO WEBEX இணைய
பக்கத்தின் மூலமாகவோ அல்லது
CISCO App
மூலமாகவோ கலந்துக் கொள்ளலாம்.

இந்த
பயிற்சிகளில், பாடக்குறிப்புகள் வழங்கப்படும். மாதிரி
தேர்வுகள் நடத்தப்படும் மற்றும்
அரசு அலுவலர்களைக் கொண்டு
மாதிரி நேர்முகத் தேர்வுகளும் நடத்தப்படும்.

பயிற்சியில் சேர: Click Here

இந்த இணைய
தள பக்கத்தில், போட்டித்
தேர்வுகளுக்கு உரிய
பாட குறிப்புகள், முந்தைய
ஆண்டு வினாக்கள் போன்றவையும் உள்ளன. தேர்வர்கள் இதனையும்
பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த பயிற்சியில் பங்கு பெற QR Code மற்றும்
மேலும் தகவல்களுக்கு வாட்ஸ்
அப் குரூப் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது QR Code வெளியிடப்பட்டுள்ளது.


RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular