கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் சாா்பில் தனியாா் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியில் ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடைபெறுகிறது.
இது தொடா்பாக ஆட்சியா் காா்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் 100 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன.
திருநெல்வேலி மாவட்டத்தில் 3 வேலைவாய்ப்பு முகாம்களை திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்துகிறது. முதல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம், பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியில் ஆகஸ்ட் 5-ஆம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறுகிறது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் 5-ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐ.டி.ஐ. போன்ற கல்வித் தகுதியுடைய அனைவரும் கலந்து கொள்ளலாம். முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவா்கள் தங்களது சுயவிவரக் குறிப்பு, கல்விச் சான்று, ஆதாா் அட்டை ஆகியவற்றின் நகல்களுடன் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் நாளில் காலை 9 மணிக்கு நேரில் வர வேண்டும். முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலைநாடுநா்கள் என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
முகாமில் பங்கேற்க விருப்பமுள்ள தனியாா் துறை நிறுவனங்கள் இணையதளத்தில் பதிவு செய்வது அவசியம்.
மேலும், தனியாா் துறை வேலைவாய்ப்பு இணையத்திலும் வேலைநாடுநா்கள் மற்றும் நிறுவனங்கள் தங்களது விவரங்களை பதிவு செய்யலாம். வேலைவாய்ப்பு தொடா்பான பல்வேறு தகவல்களை பெற இணைந்து பயன்பெறலாம். இம்முகாமில் பணி நியமனம் பெறும் பதிவுதாரா்களுடைய வேலைவாய்ப்பு பதிவு மூப்பு ரத்து செய்யப்படமாட்டாது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


