திருப்பரங்குன்றம் தியாகராஜர் பொறியியல் கல்லூரிக்கு செல்லும் வழியில் உள்ள கால்நடை மருத்துவர் அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆய்வு மையத்தில் வெள்ளாடு வளர்ப்பு, கரவை மாடு வளர்ப்பு மற்றும் நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த ஒரு மாத காலச் சான்றிதழ் உடன் கூடிய பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
புதிய பயிற்சிகள் விரைவில் தொடங்கப்பட உள்ள நிலையில் அதற்கான சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது.
இதில் சேர விருப்பமுள்ளவர்கள் வருகின்ற ஆகஸ்ட் 9-ம் தேதிக்குள் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த கால்நடை விவசாயிகள் மற்றும் சுய தொழில் தொடங்க விருப்பமுள்ள இளைஞர்கள் மற்றும் பெண்கள் இந்த பயிற்சியில் பங்கேற்க முடியும். மேலும் கூடுதல் விவரங்களை அறிய நேரில் அல்லது 0452-2483903 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


